headlines

img

ஆர்எஸ்எஸ்சின் அடுத்த இலக்கு இடஒதுக்கீடு?

ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய செயல்திட்டத்தை ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்தி வருகிறது. இரண்டாவது முறையாக மோடி அரசு பொறுப்பேற்றது முதல் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் அடுத்தடுத்து தீவிரமாக அரங்கேறி வருகிறது. புதியகல்விக்கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொடுத்த திட்டங்களை வரைவறிக்கையாக வெளியிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செயல் படுத்தவும் துவங்கிவிட்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வக்கிரப் பார்வை அடுத்து இடஒதுக்கீட்டின் பக்கம் திரும்பியிருக்கி றது. இடஒதுக்கீடு தொடர்பாக ஒருங்கிணைந்த உரை யாடல் வேண்டும் என்று அந்த அமைப்பின் தலை வர் மோகன் பகவத் திருவாய் மலர்ந்திருக்கிறார். 

சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உள்ளக் கிடக்கை. அதை அவ்வப்போது ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக தெரிவிக்கவும் செய்தது.  தற்போது மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் மாநிலங்கள வையில் பெரும்பான்மையை உருவாக்கி விட முடியும் என்ற இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தி ருப்பதாலும் இடஒதுக்கீட்டை மொத்தமாக காலி செய்வதற்கான முயற்சிகளை துவங்கியி ருக்கிறார்கள். 

பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப் பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி அதை நீர்த்துப் போக செய்வதற்கான முயற்சிக ளில் அவ்வப்போது பாஜக ஈடுபட்டு வந்துள்ளது. பல சமயங்களில் நீதிமன்றங்களும் கூட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களை வெளி யிடத் தயங்குவதில்லை. வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுப் பணி மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் குழு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முனைந்த போதுதான் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் அயோத்தி பிரச்சனையை தீவிரமாக கையிலெடுத்தார் கள். இன்று வரை அயோத்தி பிரச்சனை அவர்கள் கையில் ஒரு ஆயுதமாகவே பயன்படுகிறது. 

இடஒதுக்கீட்டினால் தகுதி, தரம், திறமை பாதிக்கப்படுவதாக வாய் கிழியப் பேசியவர்கள் பத்து சதவீத இடஒதுக்கீட்டில் பொருத்தமற்ற  பொருளாதார அளவுகோல்களை வைத்துள்ள தும், பல்வேறு வேலைவாய்ப்புகளில் பட்டியலி னத்தவரை விட இந்த பிரிவினருக்கு குறைந்த மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்தும் விவாதிப்பதே இல்லை.  வர்ணாசிரம அதர்மத்தின் அடிப்படையி லான சாதியக் கட்டுமானத்தில் எந்த சேதாரமும் ஏற்படக்கூடாது என்று பாடுபடும் ஆர்எஸ்எஸ் அந்த சாதியக் கட்டமைப்பால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தையும் பறிக்க முயற்சிக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒட்டு மொத்த இந்துக்களுக்கானது அல்ல;  பெரும் பான்மை இந்துக்களுக்கு எதிரானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

;