headlines

img

அந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது

அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டது சட்டவிரோதம் என்று கூறி கண்டித்துள் ளது. அப்படியானால் அந்த சட்ட விரோத காரி யத்தில் ஈடுபட்டவர்களுக்கு என்ன தண்டனை என்று கேள்வி எழுகிறது. அவர்கள் தண்டிக் கப்படுவது ஒன்றே நீதி நிலைநாட்டப்படுகிறது என்பதன் அடையாளமாக இருக்கும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வு, ஒரு விபத்து என்றெல்லாம் எல்.கே.அத் வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறிவந்த நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட நடவ டிக்கை என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக் கப்பட்ட 10ஆவது நாளில் ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக் கையை வழங்கினார். 

பாபர் மசூதி இடிப்பில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தளம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதி மொழிக்கு மாறாக மசூதியை இடிக்க அன்றைக்கு இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு அனுமதித்தது என்று அந்தக்குழு குற்றம்சாட்டியது.

வாஜ்பாய், அத்வானி, பால்தாக்கரே, அசோக் சிங்கால், கோவிந்தாச்சார்யா, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன், பிரவீன் தொகாடியா, சுவாமி சின்மயானந்தா, உமா பாரதி, விஷ்ணு கரி டால்மியா ஆகிய ஆர்எஸ்எஸ் பரிவார தலைவர்கள் மட்டுமின்றி, 11 அதிகாரிகளும் லிபரான் கமிஷனால் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 

இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த 68 பேரில் சிலர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எவர் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்த வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கியமாக குற்றம்சாட்டவர்களை ரெபரேலி சிறப்பு நீதிமன்றம் விடுவித்த நிலையில் அலகா பாத் உயர்நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் இவர்கள் விடுவிக்கப் பட்டதை ஏற்காத உச்சநீதிமன்றம் இரண்டு வரு டத்திற்குள் வழக்கை நடத்தி முடிக்க வேண்டு மென 2017 ஏப்ரல் 19ல் கூறியது. ஆனால் இதுவரை விசாரணை முடியவில்லை. 

இந்த வழக்கு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் போதுதான் நீதிபரிபாலன முறையின் மீது குடிமக்களுக்கு நம்பிக்கை வரும்.

;