headlines

img

போலி மரபணு மாற்று விதைகளை தமிழகத்தில் தடுத்து நிறுத்துங்கள்!

கடந்த சில வாரங்களாக பருத்தி அதிகளவு சாகுபடி செய்யும் வடமாநிலங்களில் அதிகள வில்  போலி மரபணு மாற்று விதைகள் விவசாயி களிடம் விற்பனை செய்வது அதிகரித்து காணப் படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளிடையே மரபணு மாற்று பருத்தி சாகுபடிக்கு நல்ல வரவேற்பு உள்ளதை பயன் படுத்தி பல விதை நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர் களின் துணை கொண்டு போலியான வாக்குறுதி களுடன் அதிகமாக மரபணு மாற்று விதைகளை விற்பனை செய்து வருகின்றன. இத்தகைய விதைகள் வயல்களில், தோட்டங்களில் முளைக்காத போது தான் விவசாயிகள் தாங்கள்  ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.

இதுகுறித்து நடைமுறையில் காவல்துறை யிடம் அல்லது மாநில அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெற முடியவில்லை. தற்போது மகாரா ஷ்டிர மாநிலத்தில் 25சதவீதம்  பருத்தி சாகுபடி  பரப்பளவு மரபணு பருத்தியாக உள்ளது. இது பல கோடிகள் மதிப்பு கொண்ட வர்த்தகமாக உள்ளது.

இத்தகைய சூழலில் அதிக லாபம் கருதி, தற்போது தடை செய்யப்பட்ட மரபணு மாற்று கத்தரி சாகுபடியிலும் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். போலியான மற்றும் தடை செய்யப்பட்ட மரபணு கத்திரி சாகுபடி மகாராஷ் டிரா, பஞ்சாப், குஜராத். ஆந்திரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் பரவி வருவதாக கடந்த ஆண்டு மத்திய அரசின் வேளாண் துறை  நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவும் உறுதி செய்துள்ளது.  

தற்போது இந்திய தேசிய விதை கூட்டமைப்பு சார்பில் அரசிடம் இப்போலியான மற்றும் தடை செய்யப்பட்ட மரபணு மாற்று  விதைகள் சாகுபடி தொடர்பாக நடவடிக்கை எடுத்து வேளாண் சந்தைகளில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் விதை நிறுவனங்களின் நலன்கள், விவசாயிகளின் பொருளாதார மற்றும்  வாழ்வுரிமை நலன்களை பாதுகாக்க நட வடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா ஊரடங்கு இருந்தா லும் கிராமப்புறங்களில் வேளாண் சார்ந்த நட வடிக்கைகளுக்கு தடை இல்லாத சூழலில், போதி யளவு அரசுத் துறைகளின் கண்காணிப்பு இல்லாத நிலையில் தமிழகத்திலும் மரபணு மாற்று நிறுவனங்கள் தங்கள் விதைகளை விவ சாயிகளிடம் விற்பனை செய்து அவர்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளதால் தமிழக அரசின் வேளாண் துறை மற்றும் மாநில விதைத்துறையும் பருத்தி மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப் படும் இடங்களில் போதிய அளவு  கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மாவட்ட ஆட்சியர், மாநில வேளாண்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கட்டமைப்புகள், வேளாண் அறிவியல் நிலையங்கள் இணைந்து கண் காணிப்பு பணிகளை மேற்கொள்வதன்  வாயி லாக தமிழகத்தில்தடைசெய்யப்பட்ட மரபணு விதைகள் விற்பனை மற்றும் பரவலை தடுக்கவேண்டும்.

;