headlines

img

ஆள்பிடி வேலையும் ஆட்சிக் கவிழ்ப்பும்

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தொடர்ந்து மண்ணைக் கவ்வி வருகிறது. மராட்டியத்தில் அந்தக் கட்சியால் ஆட்சியமைக்க முடிய வில்லை. தலைநகர் தில்லி சட்டப் பேரவைத் தேர்த லில் மோடியும், அமித்ஷாவும் கற்ற வித்தை அத்தனையையும் காட்டியபிறகும் பாஜக படு பாதாளத்தில் விழுந்தது. இந்த ஆத்திரத்தில் தில்லியில் ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.  இப்போது அவர்களது பார்வை மத்திய பிரதே சத்தை நோக்கி திரும்பியுள்ளது. மக்கள் ஆதரவு டன் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படுமா னால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி யமைப்பது பாஜகவின் வழக்கம். அந்த பாணியில் தற்போது மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது பாஜக.

230 உறுப்பினர்களை கொண்ட ம.பி. சட்டப் பேரவையில் காங்கிரஸ் 114 இடங்களை பெற்று   ஆட்சியமைத்தது. கமல்நாத் முதல்வராக பொறுப் பேற்றார். முதல்வர் பதவி கிடைக்காத ஆத்தி ரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார்.  இந்த உரசல் போதாதா பாஜகவிற்கு. சிந்தியா வுக்கு வலை விரித்தது பாஜக. அவருடன் ஆறு அமைச்சர்கள் உட்பட 20 எம்எல்ஏக்கள் கட்சித் தாவ முடிவு செய்தனர். இவர்களை கடத்திச் சென்று பெங்களூருவில் வைத்து பராமரிக்கும் வேலையை பாஜகவினர் செய்தனர்.

ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை யும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து அளவளாவியுள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தயாராகி வருகிறார். ஆனால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற பாணியில் சிவராஜ் சிங் சௌகான் இது காங்கிரஸ் கட்சியின் உள் விவகா ரம் என்றும், ஆட்சியை கவிழ்ப்பதில் தங்களுக்கு துளியும் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து கொல்லைப் புற வழியாக பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகி யுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேர்தலில் மக்கள் ஆதரவை பெற வக்கில்லாத பாஜக பல மாநிலங்களில் இப்படித்தான் ஆட்சியை பிடித்து வருகிறது. இதுகுறித்து அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. இது மோடி,அமித்ஷாவின் ராஜதந்திரம் என்று பாராட்டுரை வாசிக்கவும் சில ஊடகங்கள் தயாராக உள்ளன. 

ஆள் கடத்தல் மூலம் ஆட்சியமைக்கும் பாஜக ஜனநாயகத்தையும் ஒரு சேர கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மத்திய ஆட்சியதிகா ரத்தை கையில் வைத்துக் கொண்டு மாநில ஆட்சி களை கவிழ்ப்பதன் மூலம் இழிவானதொரு அர சியல் அத்தியாயத்தை பாஜக நடத்தி வருகிறது. இதன் மூலம் ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி என பீற்றிக்  கொள்ளலாம். ஆனால் அதற்காக அவர்கள் பின்பற்றிய வழிமுறை பெருமைப்படத்தக்கதாக இல்லை.

;