headlines

img

தேர்தல் முடிவுகள்- காட்டுவது என்ன?

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலும், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற  இடைத் தேர்தலும் பாஜகவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லை என்றே சொல்லவேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பெறும் வெற்றியை பெற்ற நிலையில், பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனை கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ள போதும், ஹரியானாவில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை. ஆனால் பாஜக தனது வழக்கமான பாணியில் சுயேச்சை எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கி  கொல்லைப்புற வழியாக மீண்டும் ஆட்சியமைக்க முனைகிறது. இது ஜனநாயகத்தையே இழிவுபடுத்தும் செயலாகும்.

மகாராஷ்டிராவிலும் பாஜக- சிவசேனை கூட்டணி முழு மகிழ்ச்சி பெற முடியாத நிலையே உள்ளது. இந்தத் தேர்தலில் துணை சபாநாயகர் மற்றும் ஏழு அமைச்சர்கள் தோல்வியை தழுவி யுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரசி லிருந்து கடைசி நேரத்தில் கட்சி தாவி பாஜக சிவசேனையில் சேர்ந்து போட்டியிட்ட 19 பேர் தோல்வியை தழுவியுள்ளது சந்தர்ப்பவாதிக ளுக்கு கிடைத்த அடியாகும்.

மகாராஷ்டிர மாநிலம் தஹானு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வினோத் நிகோலே பெற்றுள்ள வெற்றி தனித்து வமானது. பழங்குடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மேலும் கல்வான் உள்ளிட்ட தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியா சத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

கேரள மாநிலம் வட்டியூர்காவு, கோந்தி ஆகிய தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலை மையிலான யுடிஎப்பிடமிருந்து இந்த இரு தொகுதிகளை எல்டிஎப் கைப்பற்றியுள்ளது. சபரி மலையை உள்ளடக்கிய கோந்தி தொகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெற்று வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. சபரிமலை குறித்த பாஜக மற்றும் காங்கிர சின் பொய்ப் பிரச்சாரங்களை இந்த தொகுதி மக்கள் தீர்மானகரமாக நிராகரித்துள்ளனர்.

குஜராத்தில் ஆறு தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் மூன்று தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. பஞ்சாப்பில் நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளையும், ம.பி.யில் ஜபுவா தொகுதியையும் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. புதுவையில் காமராஜ் நகர் தொகுதியை காங்கி ரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பொதுவாக இந்தத் தேர்தல் மத்திய மற்றும் மாநில பாஜக அரசு களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை என்றே கூற வேண்டும்.

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுக பண பலம் மற்றும் அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற்றுள்ளது. இது அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப் பில்லை என்றே கூறவேண்டும்.

;