headlines

img

அந்நியருக்கு ஆதரவாக  மோசமான முடிவுகள்

 மின்னணு ஊடகத்துறையில் 26 விழுக்காடு, வர்த்தக நோக்கத்திலான நிலக்கரி சுரங்கம், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றில் 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மின்னணு ஊடகத்துறை யில் அந்நிய நிறுவனங்களின் பங்குகளை அதி கரித்தால் நாட்டின் பாதுகாப்பும் இறையாண்மையும் கேள்விக்குறியாகும்.ஏற்கெனவே இந்தியா வில் உள்ள தனியார் பெரு நிறுவனங்கள் தான் பெரும்பாலான ஊடகங்களை நடத்துகின்றன.அல்லது கட்டுப்படுத்துகின்றன. இதுபோதாது என்று அந்நிய நிறுவனங்களும் இதில் நுழைந்து ஆதிக்கத்தை அதிகரித்தால் அது நாட்டில் மோச மான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே இந்த நாசகர முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்.  நிலக்கரி சுரங்கத்துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டால் அது நாட்டின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டவே வழிவகுக்கும். மத்திய  அரசின் இந்த முடிவு தற்போது இந்த துறையில் உள்ள இந்திய நிலக்கரிக் கழகம் என்ற பொதுத் துறை நிறுவனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும். பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத் தும் இத்தகைய முடிவை மோடி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  மற்றொரு மோசமான முடிவு ஒற்றை இலட்சினை சில்லறை வர்த்தகத்திற்கான கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட இருப்பதுதான்.

இந்தியாவில் சில்லறை விற்பனையில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்கள் தங்களது விற்பனை பொருட்களில் 30விழுக்காட்டை இந்திய நிறுவ னங்களிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும் என்ற நிபந்தனையை கைவிட பாஜக அரசு முடிவு செய்துள்ளது.இதனால் அந்த வெளி நாட்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்கள் உள்பட அனைத்தையும் குறைந்த விலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யும்.இதனால் இந்தி யாவில் உற்பத்தியாகும் அத்தகைய பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கும்.இதனால் ஏராள மான உற்பத்தியாளர்களும் அந்த பொருட்களை நம்பியுள்ள வணிகர்களும் பாதிக்கப்படுவார் கள். மேலும் சங்கிலித் தொடர்போல சில்லறை விற் பனையை நம்பியுள்ள கோடிக்கணக்கான வர்த்த கர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.  வங்கித்துறையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்ட பின்னர் தொடங்கப்பட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு தனியார் வங்கிகள் நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவவில்லை. மாறாக முறைகேடான வழியில் பொதுமக்களின் சேமிப்புகளை கடன் என்ற பெய ரில் தனியார் முதலாளிகளுக்கு தாராளமாக தந்து வராக்கடனை அதிகரிக்கவே உதவின. அரசுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் இந்த நிறுவ னங்கள் உதவவில்லை. எல்ஐசி போன்ற பெரும் பொதுத்துறை நிறுவனங்கள் தான் அரசைக் காப்பாற் றின. முதலீடுகள் வேலைவாய்ப்பை பெருக்கவும் உற்பத்தியை அதிகரிக்கவும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளவும் உதவவேண்டுமே தவிர நமது நாட்டின் செல்வத்தை சுரண்டும் வகையில் இருக்கக்கூடாது.

;