headlines

img

தாகத்திற்கு அக்கினி குழம்பு அருந்துவதா?

மோடி அரசின் நடவடிக்கைகளால் உலக ளாவிய அளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஒரு அரசு மீது நம்பிக்கையி ருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்நாட்டில் முதலீடு கள் மேற்கொள்ளப்படும். ஆனால் மோடி ஆட்சிக்காலத்தில் அந்த நம்பிக்கை சிதைந்து வருகிறது என்று பிரபல பிரான்ஸ் பொருளாதார நிபுணர் கெய் சோர்மன் கூறியுள்ளார். 

இந்திய அரசு வெளியிடும் புள்ளி விபரங்கள் எதுவும் நம்பத்தகுந்தவையாக இல்லை. நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலைகொள்ளாமல் வெறுப்பு அரசியலில் மோடிஅரசு ஈடுபட்டு வரும் நிலையில் சர்வதேச அளவில் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரான கெய் சோர்மன் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. 

இந்தியாவில் உள்ளவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்திருந்தால் எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரச்சாரம் என மோடியும், அவரது பரிவாரமும் அலறியிருக்கும். ஆனால் கூறியிருப்பவரோ இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் பொரு ளாதார நிபுணர். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது மோடி அரசு. இது சர்வதேசச் சதி என்று கூட கூறக்கூடும்.  இந்தியப் பொருளாதாரம் குறித்தும், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வீழ்ந்து வருவது குறித்தும், பணவீக்கம், வேலையின்மை அதிகரித்து வருவது குறித்தும்  பொய்யான சித்தி ரங்களை மோடி அரசு தீட்டி வந்தது. ஆனால் அவையெல்லாம் நீர்க்கோலமாக மறைந்து விட்ட நிலையில் அவர்களாலேயே உண்மையை மறைக்க முடியவில்லை.

அரசு நிறுவனங்கள் வெளியிடும் புள்ளி விபரங்களை கூட தடுத்து வருகிறார்கள். இந்தியா வில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்திருப்பது குறித்தும், உணவுப் பொருட்களுக்கு செலவிடுவது குறைந்து வருவது குறித்தும், தேசிய மாதிரி சர்வே தயாரித்தி ருந்த புள்ளி விபரங்களை வெளியிட மோடி அரசு தடை விதித்துவிட்டது. வெங்காயம் உட்பட அனைத்து அத்தியாவசி யப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்த விலைவாசியைக் கட்டுப்படுத்த மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பெரும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களை மேலும் மேலும் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்ப தையே மோடி அரசு தனது தலைசிறந்த பொருளா தார உத்தியாக கருதுகிறது. இது தாகத்திற்கு அக்கினி குழம்பை அருந்துவது போன்றது.

பொதுத்துறை கட்டமைப்பு தான் இந்தியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கிறது. அதையும் சிதைத்துவிட்டால் எதிர்காலம் இருள் சூழ்ந்து விடும். பொது முதலீட்டை அதிகரிப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குவது போன்ற நடவடிக்கை களை மேற்கொள்ளாமல் குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற மக்களை பிளவுபடுத்துகிற, திசை திருப்புகிற வேலையில் ஈடுபடுவதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை மீட்க முடியாத பாதாளத்தை நோக்கி மோடி அரசு கொண்டு செல்கிறது.

;