headlines

img

முறைகேட்டுக்கு வழி செய்யும் முறையை ரத்து செய்க!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கூட பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட வில்லை. கடந்த முறை மண்டல அளவில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டி ருந்தது. தற்போது அதுவும் இல்லை. அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஏழை, எளிய தொழிலாளர்கள். சிறு, குறு வியாபாரிகள்தான். பொதுப் போக்குவரத்தை முடக்குவதால் மட்டும் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க  முடியும் என்று நிரூபிக்கப்படாத நிலையில் பொதுப் போக்கு வரத்தை அனுமதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கூட இ பாஸ் முறை கட்டாயம் என்பது தொடர்கிறது. இ பாஸ் முறை லஞ்ச லாவண்ய நடைமுறைக்கே உதவுகிறது என்பதற்கு ஏராளமான உதார ணங்களை கூறமுடியும். இ பாஸ் ஒருபுறத்தில் கூவி கூவி விற்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட போதும், இ பாஸ் முறைகேடு என்பது தங்குதடை யின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் நியாயமான காரணங்க ளுக்காக கோருபவர்களுக்கு கூட இ பாஸ்  கிடைப்பதில்லை என்ற குமுறல் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக கூட மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்புபவர்கள் பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் வணி கர்கள், டாக்சி உரிமையாளர்கள், ஓட்டுநர்க ளும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வாழ்வாதா ரத்தை இழந்துள்ளனர்.

வணிக ரீதியாக மாவட்டங்களுக்கு இடையே சென்று வர ஏதுவாக இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அத்தியாவசி யப் பொருட்களின் விலையை குறைக்கவும் இ பாஸ் முறையை ரத்து செய்வது உதவும் என்று அவர்கள் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டு மென மாநிலத்தின் பல்வேறு இடங்களில் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட் டம் நடத்தியுள்ளனர்.  இ பாஸ் முறைகேட்டில் ஈடு படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் அவ்வப்போது கூறி வந்தாலும் முறைகேடுகள்  முடிவுக்கு வரவில்லை.

இந்தப் பின்னணியில் முறைகேட்டுக்கு இ பாஸ் முறையை ரத்து செய்வதும் பொது போக்கு வரத்தை அனுமதிப்பதும் அவசியமாகிறது. இது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். மக்களை முடக்கி வைப்பதால் மட்டும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தி விட முடியாது. சோதனை கள், சிகிச்சையை மேம்படுத்துவதும் அவசியம் என்பதை அரசு உணர வேண்டும்.

;