headlines

img

செயல்பாடே தேவை

தில்லியில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடு களை களைந்து ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இவ்வாறு ஒன்றி ணைந்து செயலாற்றுவது பற்றி அமித்ஷா கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா நாட்டில் தற்போதைய சூழ்நிலை மருத்துவ அவசர நிலை என்று குறிப்பிடும் நிலையில் உள்ளதை மறந்து மேற்குவங்கம் உள்ளிட்ட மாநி லங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சார நடவ டிக்கைகளில் ஈடுபடுவதற்கே முன்னுரிமை கொடுத்திருந்தார் என்பதை நாடறியும். அத்து டன் சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்காக பிற கட்சிகளிலி ருந்து ஆட்களை பிடிப்பதற்கு தீவிரமான சதி முயற்சியில் ஈடுபட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், லோக்கல் சர்க்கிள்ஸ் என்கிற தனியார் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒரு மாதம் ஊரடங்கை அமல்படுத்தினால் கொரோனா வைரசை கட்டுப்படுத்தலாம் என 74 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள் ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி என்னவென்று யாரால் அறியக் கூடும்? இது எதற்கான முன்னோட்டம்?

நாட்டிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளான தில்லியும், அதற்கடுத்த இடத்திலுள்ள தமிழ கமும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்து வதில் எந்தளவுக்கு முனைப்புடன் செயல்படு கின்றன என்பதை பரவலின் தீவிரமே காட்டு கின்றது. வெறும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுக ளை விதிப்பதனால் மட்டும் கொரோனாவை வெற்றி கொள்ள முடியாது. 

தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அரசியல் செய்வதற்கு இது தருணமல்ல என்று கூறியிருக்கிறார். ஆனாலும் எதிர்க்கட்சியினருடன் ஆலோசித்து கொரோ னா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவ தற்கு தமிழக அரசுக்கு எண்ணமில்லை என்பது மாநில மக்களின் நல்வாழ்வில் அக்கறையற்ற தன்மையையே உணர்த்துகிறது.

தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் ஜிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் பற்றாக் குறை நிலவுகிறது என்ற செய்தி பெரிதும் கவலையை ஏற்படுத்துகிறது. தமிழக சுகாதா ரத்துறையும், மாநில அரசும் போதிய கவனம் செலுத்தி மருந்துகளை கொள்முதல் செய்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் காண வேண்டும். 

நான்கு மாவட்டங்களில் ஊரடங்கை அமல் படுத்துவதால் மட்டும் கொரோனாவை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்து மக்களுக்கு தேவையான நிவாரண நிதி மற்றும் தானிய உதவிகளை செய்வதன் மூலமே அவர்களது நடமாட்டத்தை குறைத்து நோய்ப் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை தமிழக அரசு உணர்ந்திட வேண்டும்.

;