headlines

img

2020: மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

நடந்து முடிந்துள்ள 2019ஆம் ஆண்டு, நாட்டில் முழுமையான இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சியைத் திணிப்பதை யும், மிகவும் வேகமான முறையில் சீர்கேடு அடைந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலை மையையும், அரசமைப்புச்சட்டத்தின் மீதும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவ தையும் கண்டது.  ஆண்டின் முடிவில், அரச மைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடவும், மதச்சார் பற்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு எதி ராகவும் தன்னெழுச்சியாகவும், வலுவான முறை யிலும் கிளர்ச்சி இயக்கம் நடைபெற்றுக் கொண்டி ருப்பதையும் பார்த்தது.

பாஜக, 2019 மே மாதம் மக்களவைக்கு நடை பெற்ற தேர்தலில்,  புல்வாமா பயங்கரவாத தாக்குத லையும், அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக பால கோட் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலை யும் கூறி தம்பட்டம் அடிக்கப்பட்ட “தேசியவாதப்” பிரச்சாரத்தின் முதுகில் அமர்ந்துகொண்டு வெற்றி பெற்றது. மோடி அரசாங்கம் கூடுதலாகப் பெற்ற பெரும்பான்மையுடன் மீண்டும் வந்த பின், இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைத் திணித்திட மிகவும் வெறித்தனமாக நடவடிக்கைகள் எடுப்பதையும் கண்டது. சென்ற ஆண்டு, ஏழு மாதங்கள் மீதம் இருந்த சமயத்தில், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து தகர்க்கப் பட்டதையும், உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்குச் சாதக மாக தீர்ப்பு அளித்ததையும், நாடாளுமன்றத் தால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற் றப்பட்டதையும் பார்த்தது. இம்மூன்றும் இந்துத் துவா நிகழ்ச்சிநிரலின் முக்கிய நடவடிக்கைக ளாகும்.

காஷ்மீர் மாநிலத்தை ஒழித்துக் கட்டியது

அரசமைப்புச் சட்டத்தின் மீது மோசடி செய்தும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தினை மீறியும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழான இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய தும் மேற்கொள்ளப்பட்டுள்ன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் குடிமக்கள் இயங்குவதற்கான உரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை மற்றும் சுதந்திரமாக வாழ்வ தற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, முழுமையான முறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் இன்னமும் அடைப்புக் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளனர். இணைய தளம் உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு நீண்ட காலத்திற்கு மூடப்பட்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த ஒரே மாநிலத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இத்தகைய அரக்கத்தனமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நம்பிக்கைக்கு முன்னுரிமையளித்த தீர்ப்பு

அயோத்தி தாவாவில், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கொள்கையின் மீது ஏவப் பட்டுள்ள மற்றுமொரு அடியாகும். உச்சநீதி மன்றத் தீர்ப்பானது, மதச்சார்பின்மைக்கு உதட்ட ளவில் சேவை செய்துள்ள  போதிலும், தாவாவுக் குரிய இடம் குறித்து முன்வைக்கப்பட்ட உண்மை களையும், சாட்சியங்களையும் ஒதுக்கிவைத்து விட்டு, ஒரு தரப்பாரின் நம்பிக்கைக்கு மட்டும் முன்னுரிமை அளித்திருக்கிறது. பெரும்பான்மை வாதத்துடனான இந்தச் சமரசம் அரசமைப்புச் சட்டத்தின் கீழான நிறுவனங்களே எந்த அளவிற்கு அரித்துவீழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.  

குடியுரிமை வழங்களில், மதத்தை இணைத்தது

மோடி அரசாங்கம் எடுத்துவைத்துள்ள அடுத்த அடி, நாடாளுமன்றத்தின் குளிர்கா லக் கூட்டத்தொடரில் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவை, சட்டமாக நிறைவேற்றியிருப்ப தாகும். குடியுரிமை வழங்குவதற்கான விதிகளில் முதன்முறையாக மதத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வந்தவர்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடி யுரிமை வழங்காது ஒதுக்கி வைத்திருக்கிறது. பாஜக-வின் நிகழ்ச்சிநிரல் என்பது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தேசியக் குடிமக்கள் பதி வேட்டுடன் அமல்படுத்த வேண்டும் என்பதேயா கும்.  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும் இணைத்தே பார்த்திட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம், புலம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் இந்துக்க ளுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் குடியுரிமை அளித்திட வகைசெய்யும் அதே சம யத்தில், தேசியக் குடிமக்கள் பதிவேடு முஸ்லிம் களை, “ஊடுருவலாளர்கள்” என்று முத்திரை குத்தி குடியுரிமைப் பட்டியலிலிருந்து ஒதுக்கி வைத்திட வகை செய்கிறது. இவ்வாறு, 2019ஆம் ஆண்டு மோடி அர சாங்கம், ஓர் இந்துத்துவா ஆட்சியை நிறுவுவதை நோக்கி மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதைப் பார்த்தது.

40 ஆண்டுகளில்  முதல் வீழ்ச்சி

2019ஆம் ஆண்டு மற்றுமொரு விதத்திலும் குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும். நாடு, மிகவும் மோசமான முறையில் பொருளாதார ரீதியாக சீர்கேடு அடைந்துகொண்டிருக்கும் அனு பவத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் இத்தகைய பிளவுவாத இந்துத்துவா கொள்கைகள் தூக்கிப் பிடிக்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பான விவரங்கள், அதனைக் கணக்கி டும் விதத்தில் பல்வேறுவிதமான தில்லுமுல்லு களைச் செய்த பின்னரும்கூட, தொடர்ந்து கடந்த ஏழு காலாண்டுகளுக்கு சீரான வீழ்ச்சியினையே காட்டிக்கொண்டு வந்திருக்கிறது. (ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும் உள்ள) கடைசிக் காலாண்டு, மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் வெறும் 4.5 சதவீதம் எனக் காட்டியுள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் குறைவான தாகும். தேசியப் புள்ளிவிவர அலுவலகத்தின் நுகர்வோர் செலவினம் தொடர்பான 2017-18ஆம் ஆண்டுக்கான தரவின்படி, நுகர்வோர் செலவு செய்தல் என்பது கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வேலைவாய்ப்பு தொடர்பாக அரசாங்கத் தால் மறைக்கப்பட்டுள்ள தரவு, கடந்த 45 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு வேலையின்மை விகிதம் உச்சத்திற்குச் சென்றிருப்பதாகக் காட்டுகிறது.

‘உற்பத்தி தொழில் பிரிவுகளில் வளர்ச்சி (manufacturing, industrial growth) மற்றும் ஏற்றுமதிகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களிடமிருந்து தேவை சுருங்குவதன் காரண மாக, இப்போது பணவீக்க அச்சுறுத்தலும் ஏற்பட்டி ருக்கிறது. நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் நவம்பரில் 5.5 சதவீதமாக அதிகரித்தது. டிசம்பரில் அது 6 சதவீத அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய மூலதனத்துக்கும் சலுகை

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதா கச் சொல்லி மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை களும் படுதோல்வி அடைந்திருக்கின்றன. சாமா னிய மக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் ஆகியோ ரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தில் அவர்களுக்கு பணம் அளிக்கும் விதத்தில் அரசின் செலவினத்தை அதிகப்படுத்துவதற்கு மாறாக, மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் எண்ணற்ற சலுகை களை அறிவித்திருக்கிறது. அந்நிய மூலதனம் மீதான சர்சார்ஜுகளை விலக்கிக் கொண்டு விட்டது. கார்ப்பரேட் வரியை 8 சதவீதப் புள்ளிக ளுக்குக் குறைத்துள்ளது. இவை அனைத்துமே முதலீட்டை அதிகரிப்பதற்கு உதவிடப் போவ தில்லை. ஏனெனில் பிரதான பிரச்சனை எப்படி  மக்களின் தேவையைத் அதிகரிப்பது என்பதே யாகும். மோடி-2 அரசின் மற்றுமொரு தீங்கு விளை விக்கும் அணுகுமுறை, தனியார்மயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகும். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உட்பட லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட துடித்துக் கொண்டி ருப்பதாகும். இவ்வாறு தாரை வார்ப்பதன் மூல மாக வரும் பணத்தை, அரசாங்கத்தின் வருவாய்ப் பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்குப் பயன் படுத்திக் கொள்ள இருக்கிறார்கள். ரயில்வே, ராணுவ உற்பத்தித் தொழில் பிரிவுகள், நிலக்க ரிச் சுரங்கங்கள், மற்றும் பல்வேறு பகுதிகள் இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பெண்களுக்கு பாதுகாப்பின்மை

பெண்கள் குறித்த இந்துத்துவா ஆட்சியா ளர்களின் பிற்போக்குத்தனமான சமூகக் கண்ணோட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது மிகவும் மோசமான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றிற்கு, ஹைதரா பாத்தில் மிகக் கொடூரமான முறையில் கால்நடை மருத்துவர் ஒருவர் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது, உன்னாவ் நகரில் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்ணை, கொலை செய்திருப்பது போன்றவை மிகவும் நிதர்சனமாகத் தெரியும் உதாரணங்களாகும். ஆண் ஆதிக்க மனப்பான்மையும், பெண்களை வெறுக்கும் போக்கும் இந்துத்துவா ஆட்சியாளர்கள் மத்தியில் செழித்தோங்கியிருக்கிறது. மோடி-2 அரசின் காலத்தில், அமெரிக்கா வுடனான ராணுவ மற்றும் போர்த்தந்திர உறவு கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதையும் காண்கி றோம். அது, இந்தோ-பசிபிக் போர்த்தந்திர உத்தி யாக இருந்தாலும் சரி, அல்லது நான்கு நாடுகள் கூட்டணியை மேம்படுத்துவதாக இருந்தாலும் சரி, அல்லது 2 + 2 பேச்சுவார்த்தைகளாக இருந்தா லும் சரி, ராணுவ ஒப்பந்தங்களை அமல்படுத்து வதன் மூலமாக நாட்டின் இறையாண்மையை அரித்து வீழ்த்துவது மிகவும் வேகமான முறையில் தொடர்கிறது.

உ.பி.யில் 19 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை

நாட்டின் இதர பகுதிகளில் எதேச்சாதிகாரத் தாக்குதல் வந்துகொண்டிருக்கிறது என்பதற்கான முன்னறிகுறியாகத்தான் எழுபது லட்சம் காஷ்மீரி களின் உரிமைகள் மீதான தாக்குதல் மேற்கொள் ளப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதி யான முறையில் நடைபெறும் கிளர்ச்சிப் போராட் டங்களை நசுக்குவதற்காக குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் 144ஆவது பிரிவு பயன்படுத் தப்படுவது, உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 19 பேரைச் சுட்டுக் கொன்றிருப்பது உட்பட, மிகக் கொடூரமான முறையில் தாக்குதல்கள் தொ டுத்திருப்பது, தங்கள் கொள்கைகளை எதிர்ப்ப வர்கள் மற்றும் கருத்துவேறுபாடு கொண்டிருப்ப வர்களுக்கு எதிராகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்துவது, இணைய தளத்தைத் துண்டித்து வைத்திருப்பது, குண்டர் கும்பல் கொலைகள் மற்றும் போலீசார் ரெயிடு உட்பட பல்கலைக் கழ கங்கள் மீதான தாக்குதல்கள் என அனைத்தும் எதேச்சாதிகாரக் கட்டமைப்புடன் சம்பந்தப்பட்ட பாகங்களாகும்.

தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த பாஜக

ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. முன்னதாக, ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலிலும் இது பெரும்பான்மையைப் பெறத் தவறியிருந்தது. மேலும் தன்னுடைய கூட்டணிக் கட்சியாக இருந்த சிவ சேனையையும் மகாராஷ்டிர மாநில ஆட்சியையும் இழந்துள்ளது. மாநிலத் தேர்தல்களில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவுகள்,  பாஜக-வின் மதவெறி-தேசிய வாத மேடையை எதிர்த்து முறியடித்திட, மதச்சார் பற்ற, ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதம், மற்றும் மக்கள் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய அளவிலான மாற்று ஒன்றை முன்வைத்திட வேண்டும் என்கிற முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. டிசம்பர் 11 அன்று நாடாளுமன்றத்தில் குடி யுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உடனேயே குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகிய வற்றுக்கு எதிரான நாடு தழுவிய அளவிலான கிளர்ச்சிகள், ஜனநாயகம் மற்றும் மதச்சார் பின்மை மீதான தாக்குதலுக்கு எதிராக ஏற் பட்டுள்ள முதல் குறிப்பிடத்தக்க கிளர்ச்சி இயக்க மாகும். இக்கிளர்ச்சிப் போராட்டங்களில் மாண வர்களும், இளைஞர்களும்-இளைஞி களும் முன்னணிப் பாத்திரம் வகித்துக்கொண்டி ருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் அடக்குமுறை களைத் துச்சமெனத் தூக்கி எறிந்து, இக்கிளர்ச்சிப் போராட்டங்கள் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக கடந்த மூன்று வாரங்க ளுக்கும் மேலாக  வளர்ந்துகொண்டிருக்கின்றன.

எனவே, இவ்வாறு 2019ஆம் ஆண்டு முடியும்  தருவாயில், ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதற்காக, மக்கள்திரளால் திருப்பித்தாக்கும் விதத்தில், குறிப்பிடத்தக்க விதத்தில் கிளர்ச்சிப் போராட்டங்கள் துவங்கி இருக்கின்றன. மேலும் 2020 புதிய ஆண்டு, மற்றுமொரு மகத்தான எதிர்ப்பு நடவடிக்கையை ஜனவரி 8 அன்று – பல லட்சக்கணக்கான தொழிலாளர்க ளும், ஊழியர்களும் பங்கேற்கும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் இதரபிரிவு மக்கள் கைகோர்ப்புடன் பார்க்க இருக்கிறது.     எனவே, புத்தாண்டு, ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாத்திடுவதற்கான போராட்டத்துடன், உழைக்கும் மக்களின் உரி மைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துட னும் மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் துவங்குகிறது. இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல சபதம் ஏற்போம்.

தமிழில்: ச.வீரமணி






 

;