headlines

img

பெருமுதலாளிகளுக்காக மக்களை வதைப்பதா?

உத்தரப்பிரதேச தேர்தல் காரணமாக 3 மாதங்க ளாக உயர்த்தப்படாத பெட்ரோலியப் பொருட்களின் விலை தேர்தல் முடிந்தவுடன் நாள்தோறும் ஏற்றப் பட்டு வருகிறது. ரஷ்யா- உக்ரைன் போர் காரண மாகக் கச்சா எண்ணெய் உயர்ந்துவிட்டதாக மத்திய அரசு சாக்கு கூறுகிறது. இது உண்மையல்ல. உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த மார்ச்  மாதத்திலிருந்து  குறைய ஆரம்பித்தது. இருப்பினும் உள்நாட்டில்  அரசு விலையைக் குறைக்கவில்லை. அதற்குப் பதில் வரிகளை மேலும் மேலும் அதிகரித்து மக்களை வஞ்சித்தது.

ஒன்றிய அரசின் வரி வருவாய் மிகக் குறைவாக இருந்ததால் பெட்ரோல் மீது லிட்டருக்கு  32 ரூபாய்  வரி விதித்தது. இப்படி வரிகளை  ஒன்றிய அரசு உயர்த்த வேண்டியதற்கு ஒரு காரணமும் இருந்தது. அதாவது,  பெருநிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரி விகிதத்தை 40 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அரசு குறைத்தது. பெருமுதலாளிகளைக் குளிர் விக்க அரசு எடுத்த இந்த நாசகர முடிவால் ஏற்பட்ட பற்றாக்குறையைச் சரிக்கட்ட வேறு எங்கேயாவது வரி களை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயராது என்று அரசு கருதியது. ஆனால், கொரோனா வுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் மந்த நிலையிலிருந்த பொருளாதாரம் சூடுபிடிக்கத்  தொடங்கியது.  இதனால் பெட்ரோலியப் பொருட்க ளின் தேவை அதிகரித்து  மீண்டும் விலை உயர ஆரம்பித்தது. விரைவிலேயே பெட்ரோலியப் பொருட்களின் விலை, மார்ச் மாதத்திற்கு முந் தைய விலையையும் தாண்டி 75 டாலரைத் தொட்டது. விலை குறைந்தபோது வரியை உயர்த்திய அரசு விலை உயர்ந்தபோது வரியைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. அப்படிச் செய்தால், மறுபடியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை  உயர்த்தவேண்டும். தேர்தல் நிதிக்கான பத்திரங்களில்   95 சதவீத தொகை பாஜகவுக்குத்தான்  சென்றிருக்கி றது. இந்த பத்திரங்களை வழங்கிய கார்ப்பரேட் நிறு வனங்களுக்குச் சேவகம் செய்யவேண்டும் என்ப தற்காக சாமானிய மக்களின் நலன்களை அரசு பலி கொடுக்கிறது.

பெட்ரோல் விலையைக் குறைப்பதில் அக்கறை இருந்தால் மாநில அரசுகள் வரியைக் குறைக்க வேண்டியதுதானே என நிதியமைச்சரும் பாஜக தலைவர்களும் ஏகடியம் பேசுகிறார்கள். மாநில அரசுகள் ஒருபோதும் வாட் வரி விகிதத்தை உயர்த்த வில்லை. மாறாக ஒன்றிய  அரசு ஜிஎஸ்டி பங்கீட்டில் எல்லா மாநில அரசுகளுக்கும் சேர்த்துத் தர வேண்டிய ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை இதுவரை தரவில்லை. 

 மாநில அரசுகள் விற்பனை வரி விதிக்கும் உரிமை யை  விட்டுக் கொடுத்திருக்கின்றன. இப்படிச் செய்தால் இழப்பீடு தருவதாகச் சொன்ன அரசு தனது வாக்கு றுதியைக் காப்பாற்றவில்லை. இப்படி மக்களையும் மாநில அரசுகளையும் ஏமாற்றும் போக்கை ஒன்றிய அரசு கடைப்பிடிப்பது நல்லதல்ல. எனவே நாட்டு  மக்களின் நலனைக் கருதியும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் தடுக்கவும் பெட்ரோ லியப் பொருட்கள் மீதான வரியைக் குறைப்பது தான் ஒரே வழியாக இருக்கமுடியும்.