headlines

img

சோசலிசமே தீர்வு!

மக்களின் அன்றாடத் தேவைகளான உணவுப் பொருட்கள், தானியங்கள், காய்கறி, எண்ணெய், இறைச்சி உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமை யாக உயர்ந்துள்ளன. 

உள்ளூர் மட்டத்தில் மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளால் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்காலிகத் தீர்வுகளைத் தர முடிந்திருக்கிறது. இந்த மாநிலங்கள்தான் குறைவான பணவீக்கத்தைச் சந்தித்துள்ளன. புள்ளிவிபரங்களும் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. தேசிய சராசரியை விட குறைவான பணவீக்கத்தையே இந்த மாநிலங்கள் சந்திக்கின்றன. தங்கள் சக்திக்கு உட்பட்டு வேகத்தடையாவது போட்டிருக்கிறார்கள்.

வளரும் நாடுகளில் 71 விழுக்காடு நாடுகள் இத்தகைய நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்த நாடுகளில் குறைந்தபட்சம் 5 விழுக்காட்டிற்கும் அதிகமான பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவையும் இது விட்டு வைக்கவில்லை. மார்ச் மாதத்தில் 8.5 விழுக்காடாக அந்நாட்டின் பணவீக்கம் இருந்தது. கடந்த ஆண்டில் 7.5 விழுக்காடாகும். யூரோ மண்டலத்திலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற் கான புள்ளிவிபரத்தின்படி 7.5 விழுக்காடாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

இந்த நெருக்கடிகளுக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, கொரோனா பெருந்தொற்று. மற்றொன்று, ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல். பெருந்தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி விட்டது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகளை பல ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றுகின்றன. இந்தத் தடைகள் ரஷ்யா மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை விட, ஐரோப்பிய நாடுகள் மீதான பாதிப்புகள்தான் அதிகமாகி இருக்கின்றன. சில நாடுகள் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்வது தவறான முடிவு என்ற விவாதத்தையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில்தான், சீனா தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நுகர்வுப் பொருட்க ளின் விலை வெறும் 1.5 விழுக்காடுதான் அதி கரித்திருக்கிறது. பிற நாடுகளோடு ஒப்பிடுகை யில், இது பெரும் சாதனையாகப் பார்க்கப்படு கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை நிர்ணயத்தை சந்தையிடம் விடாமல், கடிவாளம் போட்டு வைத்திருந்ததுதான் நெருக்கடி நேரத்தி லும் சீனாவால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது.

அதேபோன்று, வியட்நாமின் பணவீக்கமும் 2.64 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருக்கிறது. பொருட்களின் விலைகளை உயர விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து, கிராக்கி இல்லாத நிலையை உருவாக்கி நிலைமையைப் பாதுகாத்துள்ளனர். கொரோனா காலத்திலும் கூட, மனித விரோத பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா சுமத்தாமல் இருந்திருந்தால் கியூபா வும் இந்தச் சாதனைகளைப் படைத்திருக்கும். முதலாளித்துவம் நெருக்கடியில் தத்தளிக்கை யில் சோசலிசம் கம்பீரமாக நடைபோடுகிறது.

;