headlines

img

ஆர்எஸ்எஸ் தலைவரின் அளப்பு

‘பேசுவது மானம், இடை பேணுவது காமம்’ என கும்பகர்ணன் தன்னுடைய அண்ணன் ராவ ணனை சாடியதாக கம்பன் பாடுவார். இதே  போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சாதிமதங்க ளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது போல ஒருபக்கம் பசப்பும், மறுபுறத்தில் சனாதன இந்தியாவை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம் என்றும் முழங்கும்.

வர்ண அமைப்பை பாதுகாப்பதற்காகவே 1925இல் உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஆர்எஸ்எஸ். பிறப்பின் அடிப்படையில் நிர்ண யிக்கப்படும் சாதிய அமைப்பை பாதுகாப்பது, முதலாளிகள் மற்றும் நில பிரபுக்களுக்கு சேவ கம் செய்வது என்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். தன்னுடைய நோக்கத்தை நிறை வேற்ற நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராள மான துணை அமைப்புகளை ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது.

இதை மூடி மறைக்க தங்களுடைய அமைப்பு சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது போல வும், பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடி மக்களுக்கு சேவை செய்வது தான் தங்கள் நோக்கம் என்பது போலவும், அவ்வப்போது கூறிக்கொள்வார்கள். 

கான்பூரில் நடைபெற்ற வால்மீகி பிறந்த நாள் விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பின்தங்கிய சமூகத்தினரின் மேம் பாட்டிற்கு சட்டம் இயற்றுவது மட்டும் போதாது, அந்த மக்கள் மீதான மற்றவர்களின் மனநிலை மாற வேண்டும் என்று உபதேசம் செய்துள்ளார்.

சாதிய அடுக்குமுறையை நியாயப்படுத்தும் வேதங்களையும், புராணங்களையும் தூக்கிச் சுமப்பது ஆர்எஸ்எஸ் அமைப்புதான். பிறப்பி னால் மனிதர்களுடைய தகுதி தீர்மானிக்கப் படுவதாக உளறும் மனு அநீதியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் இவர்கள் தான். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாச னத்திற்கு பதிலாக மனுஅநீதியை சட்டமாக்கச் சதி செய்வது, மறுபுறத்தில் பின்தங்கிய மக்கள் குறித்து போலிக் கண்ணீர் வடிப்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் வாடிக்கை.

ஆர்எஸ்எஸ் அமைப்பினால் வழிநடத்தப் படும் பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடி மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. உ.பி., மாநிலத்தையே இதற்கு உதாரணமாக காட்ட முடியும். தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒருபுறமென்றால், மாநில ஆட்சியாளர்களே குற்றவாளிகளை பாது காக்கும் கொடுமை  அரங்கேறுகிறது.

பட்டியல் பிரிவு மக்களின் உணவு உரிமை யில் கூட தலையிடுவது மட்டுமல்ல, அதற்காக கொலை செய்யவும் தயங்காத கூட்டம் தான் இந்துத்துவா கும்பல். இதையெல்லாம் என்றைக் காவது ஆர்எஸ்எஸ் தலைவர் கண்டித்தது உண்டா? இந்த இலட்சணத்தில் ஊருக்கு உபதே சம் செய்ய புறப்பட்டுவிட்டார் மோகன்பகவத். இவர்களது நயவஞ்சக வேடத்தை உழைக்கும் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.