தேசத் துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு நீதித்துறை யின் மீதும், இந்திய ஜனநாயகத்தின் மீதும் மக்க ளின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.
ஒன்றிய மோடி அரசு இந்தியாவின் மக்க ளாட்சி முறையை, மன்னராட்சி முறையாக படிப் படியாக மாற்ற முயற்சிக்கிறது. இந்த வழக்கில் கூட ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரத்தில் “தேசத் துரோக சட்ட விதிகள் குறித்து பிரதமர் மோடி முக்கிய கருத்துகளை கொண்டி ருக்கிறார். சிவில் உரிமைகளை பாதுகாக்க அவர் தயங்குவதில்லை. இந்த சட்டம் குறித்து பொருத் தமான இடத்திலிருந்து வேறு ஒரு சட்டத்தை உருவாக்குகிறோம்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இங்கே மோடிக்கு என்ன கருத்து இருக்கிறது என்பதா பிரச்சனை? மோடி நினைப்பதுதான் சட்ட மா? மோடிக்காகவா சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது? அப்படி எனில் அரசிற்கு என கருத்து இல்லையா? இது வரை வைக்கப்பட்டது அரசின் கருத்து இல்லையா?
தற்போது அரசு என்றால் மோடி, மோடி என்றால் அரசு என பொருள் கொள்ளும்படி கூறப் பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் கூட்டத்திற்கு மோடி மன்னராக இருக்கலாம். மக்களுக்கு எவரும் மன்னர் கிடையாது. இது மக்களாட்சி முறைக்கே நேர் எதிரானது. பொருத் தமான இடத்திலிருந்து வேறு ஒரு சட்டத்தை உரு வாக்குவோம் என்றால், நாடாளுமன்றத்திற்கு என்ன வேலை? பிரதமர் மோடிக்கு பொருத்தமான இடம் நாக்பூர்தான், அங்கிருந்துதான் புதிய சட்டம் உருவாகுமா? இது ஒன்றிய மோடி அரசின் பாசிச மனப்பான்மையை நிலைநிறுத்தும் உத்தி ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளில் தேசத்துரோக சட்டத் தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. தற்போதும் 13 ஆயிரம் பேர் இந்த வழக்கின் கீழ் சிறையில் இருக்கின்றனர். 70 சதவிகித வழக்குகளில் குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்குகளில் தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதம்தான். அரசை விமர் சிப்பவர்களை பழிவாங்க இந்த சட்டத்தை ஒரு ஆயுதமாக பாஜக அரசுகள் பயன்படுத்தி வரு கின்றன.
ஜார்க்கண்டில் நிலம் கையகப்படுத்தலை எதிர்த்த 10 ஆயிரம் பழங்குடி மக்கள் மீது தேசத் துரோக வழக்கை பதிவு செய்தது பாஜக அரசு. ஒன்றிய அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர் கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மீது தேசத் துரோக முத்திரை குத்தி சித்ரவதை செய்வதை நீதிமன்றங்களே பல முறை கண்டித்திருக்கின்றன. நாட்டின் வளங்களை கூறு கட்டி விற்று, வரிமேல் வரி விதித்து மக்களை வாட்டி வதைத்து உண்மை யில் மக்களுக்கு துரோகம் செய்வது ஒன்றிய அரசுதான்.
மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில், தேசத் துரோக சட்டத்தை மறுபரிசீலனை மற்றும் மறு ஆய்வு செய்கிறோம் என்று சொல்வது நீதிமன்ற தை ஏமாற்றி, திசை திருப்பும் வஞ்சக உத்தி ஆகும். இதனை அனுமதிக்கக் கூடாது. இன்றைய சூழலில் உச்ச நீதிமன்றம் இச்சட்டத்தை தற்காலி கமாக செயலிழக்கச் செய்ததோடு விட்டு விடாமல், நிரந்தரமாக தூக்கியெறிய வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும்.