headlines

img

விற்பதில் காட்டும் ஆர்வத்தை செலுத்துவதில் காட்டுக!

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ஒன்றிய பாஜக அரசு ஒவ்வொரு நாளும் ஒரு தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி பிறந்த நாளன்று 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்ததாகச் சொல்லப் பட்டது. ஆனால் அது பின்னர் 2.3 கோடி தடுப்பூசி யாக குறைந்து போனது. அப்படியெனில் 20 லட்சம் தடுப்பூசிகள் என்னவாயின? பிரதமரின் பில்டப் பிம்பத்துக்கு முட்டுக் கொடுக்க செய்யப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை என்பதை மறைக்க முடியவில்லையே!

ஆனாலும் தற்போது ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா வரும் காலாண்டில் தடுப்பூசி உபரியாக இருக்கும் என்றும் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஏற்கெனவே மாநிலங்களின் தடுப்பூசித் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனாலும் கூட மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சமாளிக்கிறார்.

முதலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவ ருக்கும் தடுப்பூசி இந்த ஆண்டுக்குள் செலுத்தப் படும் என்று பிரதமர் மோடி முழங்கினார். ஆனால் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அந்த இலக்கை  கைவிட்டு விட்டது போலவே அமைந்திருந்தன. ஆயினும் 60 விழுக்காடு இலக்கு வைத்தாலும் கூட நாளொன்றுக்கு 1.22 கோடி தடுப்பூசி செலுத் தப்பட வேண்டியது கட்டாயம். ஆனால் பிரதமரின் பிறந்த நாளன்று காட்டப்பட்ட முனைப்பு மறுநாளே குறைந்து போனது. தற்போது மூன்று நாள் செலுத்தப் படும் தடுப்பூசியின் அளவே அந்த ஒருநாள் தடுப்பூசி செலுத்தும் அளவை எட்டுவது அரி தாக உள்ளது.

இந்த நிலையில்தான் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். இது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். இது அப் பட்டமாக மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மீது  கொண்ட கரிசனமேயன்றி வேறென்ன? அதனால் தானே தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நாட்டின் பொதுத்துறை மருந்து நிறுவனங்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு விடுத்த வேண்டுகோளும் கூட ஏற்கப்படவில்லை. ஆனால் சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறு வனங்களின் உற்பத்தியிலும் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மோடி மிகுந்த கவனமாகவே இருக்கிறார்.

தற்போது கோவாக்சின் மருந்துக்கு சர்வதேச அங்கீகாரம் அதாவது உலக சுகாதார நிறுவ னத்தின் ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி மேற்கொள் ளப்படுவதாகச் செய்தி வெளி வந்துள்ளது. இப்படி நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நடக்க வில்லை என்பது நிதர்சனம். பாஜகவின் நன் கொடையாளர்களும் பெரு நிறுவனங்களும் பயன் பெற வேண்டும் என்பதற்கானதாகவே உள்ளது. இத் தகைய போக்கைக் கைவிட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதே நாட்டு மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும். எனவே தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு விற்பதில் காட்டும் ஆர்வத்தை நம்நாட்டு மக்களுக்கு செலுத்துவதில் காட்ட வேண்டும்.

;