headlines

img

உண்மையை உரைப்பாரா?

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீப காலங்களாக அமைதி விரும்பும் நல்லெண்ண தூதுவர் போல பேசிக் கொண்டிருக்கிறார். மசூதி களுக்கு செல்கிறார். குருத்வாராவுக்கு போகிறார். அங்கெல்லாம் ஒற்றுமை பற்றி உபதேசம் செய்கி றார். ஆயினும் கடைசியாக தங்களது இந்துத்துவா  அடையாளத்தை வெளிப்படுத்திவிட்டே வரு கிறார்.

அதுபோன்றே கடந்த ஞாயிறன்று மும்பையில் புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸ் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். சாதிகளை எந்த சாமியும் படைக்கவில்லை. சாமியார்கள் தான் அவர்களின் சுயலாபத்திற்காக உருவாக்கி னார்கள். ஆனால் என்றும் இறைவன் பார்வை  முன் அனைவரும் சமமே. இதை போதித்ததால் தான் ரோஹிதாஸ் புனிதரானார் என்று மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

சாதியை சாமியார்கள்தான் படைத்தார்கள் எனில் அதை கைவிடாமல் சனாதன தர்மம் என்ப தன் பெயரில் நீடிக்க செய்வதற்காக பாடுபடுப வர்கள் யார்? இந்துத்துவா வைதீக கோட்பாட்டை தூக்கிப் பிடிப்பவர்கள் யார்? அதற்கு எதிராக பாடு படும் தலைவர்களை கொலை செய்து ஒழித்துக் கட்டுபவர்கள் யார்? இவையெல்லாம் உங்களது இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் தானே. 

இந்துத்துவா என்பது ஒரு வாழ்வியல் கோட்பாடு என்று கூறிக்கொண்டு சாதி வேறுபாடு களை பாதுகாப்பதற்காக சதுர்வர்ணம் என்கிற நால் வர்ண இந்து தர்மம் என்கிற அதர்மத்தை காப்பாற்ற கொலை பாதகச் செயலில் ஈடுபடுவது ஏன்? 

சதுர்வர்ணம் மயா சிருஷ்டி என்று மகாபார தத்தில் கிருஷ்ணனை சொல்ல வைத்தவர்கள் யார்? அவர் மூலமாகவே, இதை நானே நினைத் தாலும் மாற்ற முடியாது என்று கூற வைத்தது  ஏன்? சாதி ரீதியான ஏற்றத்தாழ்வு  கொண்ட சமு தாயத்தை நிலைக்க செய்வதன் மூலம் பயனடை பவர்கள் யார் என்பது பகவத்துக்கு தெரியாதா?

இந்த உலகில் எந்த ஒரு வேலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பிரிக்க முடியாது என்று மோகன் பகவத் கூறுகிறார். அவரது கூட்டம், கோவில் கரு வறையில் அர்ச்சகர் பணி செய்வதையும் தெரு வில் சாக்கடையை சுத்தம் செய்வதையும் ஒன்றெ னக் கருதினால் இவைகளை இப்போது செய்ப வர்கள், ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொண்டு அந்தப் பணிகளைச் செய்யலாமே. அதை தடுப்பார் யார்? அர்ச்சகர் பணிக்கான கல்வியை முடித்த தகுதி பெற்ற பிராமணர் அல்லாதவர்களை அந்தப் பணி செய்ய விடாமல் நீதிமன்றம் மூலம் தடுப்பது ஏன்? 

தீண்டாமையை பாபாசாகேப் அம்பேத்கர் எதிர்க்கிறார். தீண்டாமையை எதிர்க்கவே அம் பேத்கர் இந்து தர்மத்தை கைவிட்டார் என்று பகவத் கூறுகிறார். ஆனால் அவரது இந்து தர்மம் என்பது தீண்டாமையை கடைப்பிடித்ததி னால்தானே அம்பேத்கர் வெளியேறினார் என் பதை உரைக்க தயங்குவது ஏன்? ஆனாலும் நமக்கு பிடித்த மதத்தை பின்பற்றலாம். ஆனால் பிற மதத்தை நாம் சேதப்படுத்தக்கூடாது என்று அவர் கூறுவது அவருக்குப் பொருந்தாதோ? 

;