headlines

img

தப்ப விடப்படும் குற்றவாளிகள்

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி முகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து 13 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி ஏமாற்றி விட்டு திரும்பச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து இந்தியா கொண்டு வந்து விசாரித்து தண்டிக்கப் போவதாக ஒன்றிய அரசு அவ்வப்பொழுது ஒப்புக்கு கூறி வருகிறது.

ஆனால் முகுல் சோக்சி, மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட யாரையும் இந்தியா கொண்டு வந்து விசாரித்து தண்டிப்பதற்கு ஒன்றிய அரசு உண்மையிலேயே அக்கறை கொள்ளவில்லை. 

இதற்கு சமீபத்திய உதாரணம் இண்டர்போல் ரெட்நோட்டீஸ் பட்டியலிலிருந்து முகுல் சோக்சி பெயர் நீக்கப்பட்டிருப்பதாகும். மத்திய புலனாய்வுத் துறையின் கோரிக்கையை ஏற்று அவரது பெயர் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் தன்னு டைய பெயரை இதிலிருந்து நீக்க வேண்டுமென சோக்சி இண்டர்போல் கட்டுப்பாட்டு ஆணை யத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை என்று கூறி இண்டர்போல் அவரது பெயரை நீக்கிவிட்டது.

இதனால் சோக்சி இப்போது பதுங்கியுள்ள நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கும் தப்பிச் செல்ல முடியும். அவ்வாறு சென்றால் அவரை கைது செய்ய முடியாது. இதுதான் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்கை நடத்தும் லட்சணம். 

மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக் கத்துறையை தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கே நரேந்திர மோடி தலைமையி லான அரசு பயன்படுத்துகிறது. இந்திய பொதுத் துறை வங்கிகளில் மக்களின் சேமிப்புப் பணத்தை  கடனாகப் பெற்று ஏப்பம் விட்டு தப்பியோடியவர்களை பிடிப்பதில் அளவு கடந்த அலட்சியம் காட்டப் படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியான கவுதம் அதானியின் பங்குச் சந்தை மோசடிகளை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறு வனம் வெளிப்படுத்தியது. அதுகுறித்து விசா ரணை நடத்துமாறு கோரிக்கை வைக்க அமலாக் கத்துறை அலுவலகத்திற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் 200 பேர் ஊர்வலமாக செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அதானி குறித்து நாடாளு மன்றத்தில்  பேசக்கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதானிக்காக நாடாளு மன்றத்தை முடக்கி வைக்கக்கூட ஒன்றிய ஆட்சி யாளர்கள் தயங்குவதில்லை.

பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி தப்பியோடியவர்கள் பாஜகவின் நன்கொடையா ளர்கள். அதனால்தான் அவர்களை தண்டிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மனமில்லை போலும். மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி போன்றவர்கள் இன்னும்  கொஞ்ச நாளில் குற்றமற்றவர்கள் என்று அறி விக்கப்பட்டால் கூட ஆச்சரியப்பட முடியாது. இண்டர்போல் ரெட்நோட்டீசிலிருந்து சோக்சி  விடு விக்கப்பட்டிருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த மோசடியின் வேர்கள் எந்தளவுக்கு நீண்டு செல்கிறது என்பதற்கான உதாரணம்.

;