headlines

img

அதிகார ஆணவம்

கன்னட நடிகர் சேத்தன்குமார் அகிம்சா என்ப வர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்துத்துவாவினர் கட்டமைக்கும் பொய்கள் குறித்து கேள்வி எழுப்பி யிருக்கிறார். இதற்கு கருத்தியல் ரீதியாகப் பதில் சொல்ல முடியாத ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரி வார் கும்பல் அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவரை சிறையில் அடைத்திருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அதிகா ரத் திமிரில் ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தை அப் பட்டமாகப் பறிக்கும் அடாவடி செயல் ஆகும்.

சேத்தன்குமார் தனது பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது.   ராவ ணனை வீழ்த்தி ராமன் அயோத்தியா திரும்பியதி லிருந்து இந்திய நாடு என்பது தொடங்குகிறது என்ற சாவர்க்கரின் கருத்து ஒரு பொய். 1992: பாபர் மசூதியே ராமரின் பிறப்பிடம் என கூறியது ஒரு பொய். 2023: உரிகவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோர் திப்புவை கொன்றவர்கள் என்றதும் ஒரு பொய் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும். சமத்துவம் என்பதே உண்மை எனத் தெரிவித்துள்ளார்.

இதில் என்ன தவறு இருக்கிறது? இது கருத்தியல் ரீதியான ஒரு விவாதம். இதற்கு மாற்றுக் கருத்து இருப்பின் ஆதாரங்களை முன் வைத்து வாதிடலாம். மாறாக பாஜக தனது ஆட்சிய திகாரத்தை பயன்படுத்தி கைது செய்து அச்சுறுத்து வதால் உண்மை ஒரு போதும் பொய் ஆகாது. கருத்து ரீதியான இது போன்ற முன்வைப்புகளை அளவுகோலாக எடுத்தால் இந்திய எல்லையைச் சுற்றித்தான் சிறைச் சுவரை எழுப்ப வேண்டும். ஒரு வரும் வாய் திறக்க முடியாது. இதுதான் இந்துத் துவா கும்பல் முன்வைக்கும் ஜனநாயகம்.

உண்மையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக வெறுப்பை உமிழ்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றால், முதலில் மோடி, அமித்ஷா வகையறாவைத்தான் கைது செய்ய வேண்டும். தேர்தல் வரும் போதெல்லாம் விஷத்தை கக்குபவர் கள் யார் என்பதை இந்த நாடு அறியும். பாஜக வினரின் வெறுப்பு பேச்சைப் பட்டியலிட்டால் பக்கம் கொள்ளாது. 2015 முதல் 2019 வரையில் மட்டும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அமைச்சர் கள், எம்எல்ஏ க்களின் வெறுப்புப் பேச்சு 500 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

“இஸ்லாம், உலக அமைதிக்கு எதிரான வெடி குண்டு.” இஸ்லாம் மதத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தீவிரவாதத்தை அழிக்க முடியாது” என்று சொன்னவர்  இதே கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? எத்தனை நாள் சிறையில் அடைக்கப்பட்டார் ? அதுமட்டுமல்ல, பாஜக ஆட்சியிலிருந்தால்தான் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நீக்க முடியும்’ என்றும் பேசியிருக்கிறார். 

இதையே மறைமுகமாக நிறுவ ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் முயற்சிக்கின் றன.  இது இந்திய மதச்சார்பற்ற அரசியலமைப் பிற்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கே மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும்.

;