headlines

img

பாஜகவின் அராஜக அரசியல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே வாரத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கடந்தவாரம் வரை முதல்வராக இருந்தவர் முன்னாள் முதல்வ ராக மாறிவிட்டார். முன்னாள் முதல்வராக இருந்த வர் பாஜக தலைமையால் துணை முதல்வர் பதவியை ஏற்கவைக்கப்பட்டுள்ளார். ஒரு கட்சியை பெரு மளவில் உடைக்க உதவிய ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி பம்பர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதியளவு கூட இல்லாத போதிலும் அதிருப்தி சிவசேனா தலைவர் ஷிண் டேவுக்கு  முதல்வர் பதவியை வழங்கியது பாஜகவின் பெருந்தன்மையைக் காட்டுவதாகச் சிலர் கூறு கிறார்கள். இதில் முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கலும் பதவி வெறியும் தான் உள்ளது.

கொள்கை ரீதியாக இந்துத்துவா கருத்துக்க ளைக் கொண்ட பாஜகவும் சிவசேனாவும் இயற் கையான கூட்டாளிகள் என்று ஒருகாலத்தில் கூறி வந்தனர். ஆளும் கட்சியாக இருந்த சிவசேனா வை பாஜக விழுங்கப் பார்த்தபோது விழித்துக் கொண்ட சிவசேனா தன்னை பாதுகாத்துக் கொள்ளக் கொள்கை ரீதியாக எதிரும் புதிருமாக இருந்த  தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக ளுடன்  கூட்டு சேர்ந்தது. இரண்டரை ஆண்டுகள் கூட்டணி ஆட்சியையும் நடத்தியது. இதனால் அதிகாரம் பறிபோனதை  ஜீரணித்துக் கொள்ள முடியாத பாஜக நேரம் பார்த்து சிவசேனாவை பழி வாங்கி விட்டது. அது சிவசேனாவை சின்னா பின்னமாக்கும் வரை ஓயாது. 

அடுத்து உண்மையான சிவசேனா யார்? என்று பிரச்சனையைப் பெரிதாக்கும். தனக் குள்ள செல்வாக்கைத் தேர்தல் ஆணையத்தி லும் நீதித்துறையிலும் பயன்படுத்தி விதிமுறை களை வளைக்கும். ஜனநாயக நாட்டில் கட்சி கள் சுதந்திரமாகச் செயல்படுவதைக் கேள்விக் குறியாக்கும் பாஜகவின் இத்தகைய அராஜகப் போக்குகள் ஆபத்தானவை.   பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவ்வப்போது ஆற்றும் உரையைப் பார்த்தால் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க இவர்களை விட்டால் வேறுயாரும் இல்லை என்பதைபோல் இருக்கும். ஆனால் நடைமுறையில்  கடந்த 8 ஆண்டுகளில் அரசி யல் சாசனத்தை சிதைக்கும் வேலையைத் திட்ட மிட்டுச் செய்திருக்கிறார்கள்.  தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். 

“சிவசேனாவில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பூசல் என்றும், இதில் பாஜகவின் பங்கு இல்லை’’ என்றும், தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறார்கள்.  ஆனால் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநி லத்தில் தங்கியிருந்தபோது தேவேந்திர ஃபட்னா விஸ் காணொலி வாயிலாக இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார். அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக எந்த ஒரு இழிவான செயலையும் செய்யத் தயங்காது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.  எனவே அம்மாநிலத்தில் பாஜக மேற் கொண்ட இந்த சோதனை மற்ற மாநிலங்களுக் கும் பரவ வெகுநாட்கள் ஆகாது. எனவே மதச்சார் பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சித்தத்துவம் ஆகியவற்றில் அக்கறையுள்ள கட்சிகள் பாஜகவின் இந்த அராஜக அரசியலை வேரறுக்க ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 

;