headlines

img

எதேச்சதிகாரத்தின் ஒரு பகுதி!

குஜராத் சமூகப் போராளி டீஸ்டா செதல்வாத்தின் கைது ஒரு தனிப்பட்ட அல்லது விதிவிலக்கான நிகழ்வு அல்ல. இந்திய அரசியல் பயணிக்கும் மோசமான எதேச்சதிகாரத்தின் ஒரு  பகுதியாகும் இது! மதவாதம் தன்னை நிலை நிறுத்தி கொள்ள எடுக்கும் பல முனைப்புகளில் எதேச்சதிகாரம் ஒரு முக்கிய அம்சமாக முன்வரு கிறது. எதிர்வினையாற்றும் சிறுபான்மையினர் மட்டுமல்ல; பெரும்பான்மை பிரிவை சேர்ந்தவர்களையும் அது விட்டு வைப்பது இல்லை. பீமா கொரோகான் வழக்கில் ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் இவர் களுக்கு பிணை தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இவர்களில் ஸ்டேன் சுவாமி சிறைக் கொடுமை யால்  உயிரிழந்தார். மிக நெடிய சட்டப் போராட்டத் துக்கு பின்னால் சுதா பரத்வாஜ் பிணை பெற்றார். ஆனால் ரோனோ வில்சன் மற்றும் ஆன்ந்த் டெல்டும்டே உட்பட பலரும் சிறையில் உள்ளனர்.

ரோனோ வில்சன் மின்னஞ்சலிலிருந்து மோடிக்கு எதிராக தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றது எனும் புகாரின் அடிப்படையில்தான் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அத்தகைய மின்னஞ்சல் செய்தியை தான் அனுப்ப வில்லை என ரோனோ வில்சன் தொடர்ந்து மறுத்து வந்தார். காவல்துறையினரே வெளிநாட்டின் மென்பொருள் மூலம் அந்த மின்னஞ்சலை ரொனோ வில்சன் கணினியில் இட்டு, பின்னர் அதன் அடிப்படையில் கைது  செய்துள்ளனர் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது. இதே போல ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்லும் பத்திரிக்கையாளர்கள் உட்பட சுமார் 300 பேரின் அலைபேசிகளை ஹேக் செய்ய பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் வாங்கப்பட்டது. ஒரு அலைபேசியை ஹேக் செய்ய செலவு சுமார் 99 லட்சம் ரூபாய்!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் நட்டாஷா நர்வால், தேவாங்கனா கலிதா ஆகியோரும் ஜாமியா பல்கலை;ககழக மாணவி குல்ஃபிஷா பாத்திமாவும் அடங்குவர்.  இவர் களுக்கும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது. இவர்களிடம் சீதாராம் யெச்சூரி, பிருந்தா  காரத்,  யோகேந்திர யாதவ், குலாம் நபி ஆசாத்  ஆகியோரின் உணர்ச்சிமிகு உரையை கேட்டுத் தான் நாங்கள் போராட்டத்தில் குதித்தோம் என  எழுதிக் கொடுத்தால் உடனடியாக விடுதலை என பேரம் பேசினர். ஆனால் அந்த மாணவிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. நட்டாஷா நர்வால், தேவாங்கனா கலிதா ஆகியோர் பல மாதங்களுக்கு பின்னர் பிணை பெற்றனர். எனினும் குல்ஃபிஷா பாத்திமா இன்னும் சிறையில்தான் உள்ளார். 

மோடி அரசாங்கம் அதைவிட மோசமான எதேச்சதிகார பாதையில் வேகமாக சென்று கொண்டுள்ளது. நீதித்துறை உட்பட அரசியல் சாசனம் உருவாக்கிய பல அமைப்புகளின் செயல் பாடுகள் கவலை தருவதாக உள்ளது. இந்த எதேச்சதிகாரம் தடுக்கப்படாவிட்டால் எவருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை. இதுவே டீஸ்டாவின் கைது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் செய்தி ஆகும்.

;