ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு முதன்முறை யாக கூடி ஆலோசனை நடத்தி வந்தது. இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அர சியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர் பாக சட்ட ஆணையத்தின் ஆலோசனைகளை யும் பெறுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலிக்க ஏற்கெனவே அமைக்கப் பட்ட குழுக்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல என்று கைவிரித்துவிட்ட நிலையில் நாட்டின் உண்மையான பிரச்சனை களிலிருந்து மக்களை திசைதிருப்ப இதை மீண்டும் மோடி அரசு கையில் எடுத்துள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, சிஏஜி அம்பலப்படுத்தியுள்ள ரூ.7.5லட்சம் கோடி ஊழல், நாடு முழுவதும் சங் பரிவாரத்தால் சிறு பான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றவற்றை மக்களுடைய கவ னத்திலிருந்து மறைப்பதற்காக இந்த பிரச்ச னையை பாஜக அரசு கிளப்பிவிட்டுள்ளது.
மணிப்பூர் இன்னமும் தீப்பிடித்து எரிந்து கொண்டுதான் இருக்கிறது. பழங்குடி மக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வில்லை. ஆனால் இதுகுறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்கக் கூட மோடி அரசு அனு மதிப்பதில்லை. மோடியின் நெருங்கிய கூட்டாளி யான கௌதம் அதானி தொடர்பாக ஹிண்டன் பர்க் அம்பலப்படுத்திய ஊழல் குறித்து கூட நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள் ளது. இந்த மசோதா இப்போதாவது நிறைவேற்றப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதை நடைமுறைப்படுத்தும் எண்ணம் மோடி அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி வரையறைக்குப் பிறகு 2029 தேர்தலில் இது ஒரு வேளை நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. மறுபுறத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தால்தான் மற்ற பிரச்சனைகளை மக்கள் கவனிக்கமாட்டார்கள் என்று கருது கிறார்கள்.
543 மக்களவைத் தொகுதிகள், 4,120 சட்ட மன்றத் தொகுதிகள், 30லட்சத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்துவது சாத்தியமுமல்ல, தேவையும் அல்ல என்பதைத் தெரிந்தே மோடி அரசு மக்களை திசைதிருப்பி வருகிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதன் மூலமே இந்தியாவின் அரசியல் சட்ட அமைப்புகளை பாதுகாக்க முடியும்.