headlines

img

உரையை மறுக்கும் பொருளாதார ஆய்வறிக்கை

‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்’ 

- என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருந்தாலும், செய்ய வேண்டாததை செய்தாலும் கெடுதியில் முடியும் என்பது இதன் பொருள். இந்த குறள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு முற்றிலும் பொருந்தும்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கியுள்ள நிலையில், ஒன்றிய அரசு திருவள்ளுவர், ஆதி சங்கரர், குருநானக் ஆகியோர் வழியில் செயல்படு வதாக குடியரசுத் தலைவர் உரையில்  குறிப்பிட்டுள் ளது. துல்லியத் தாக்குதல், அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கம், முத்தலாக் முறை ரத்து போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீர்க்க மாக எடுத்துள்ளது என்று உரை கூறுகிறது.

ஆனால் நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனை கள், ஒன்றிய அரசு நிறைவேற்றத் தவறிய வாக்கு றுதிகள் குறித்து இந்த உரையில்ஒன்றும் இல்லை. குறிப்பாக விலைவாசி உயர்வு, பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலை யின்மை, வறுமை போன்றவை குறித்து எதுவும் இல்லை. அப்படி நாட்டில் பிரச்சனைகள் இருப்பது போலவே குடியரசுத் தலைவர் உரை காட்டிக் கொள்ளவில்லை. எல்லாம் இன்பமயம் என்ற பாணியிலேயே குடியரசுத் தலைவர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் உரைக்கு முன்பாக  செய்தி யாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திரமோடி நேர்மறையான செய்திகளுடன் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது என்று குறிப்பிட் டார். குஜராத் வன்முறையில் நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு இருந்தது குறித்த பிபிசியின் ஆவ ணப்படம், ஒன்றிய அரசின் முழு ஆதரவுடன் செயல்பட்டு வரும்  அதானி நிறுவனத்தின் பித்தலாட் டம் குறித்த   ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை போன்றவை வெளியாகி இந்த அரசின் ‘நேர்மறை’ தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. குடியரசுத்தலைவர் உரையில் வார்த்தை ஜோடனைகளால் உண்மையை மூடி மறைக்க முயன்றாலும், பொருளாதார ஆய்வ றிக்கை மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை எந்தளவுக்கு படுகுழியில் தள்ளியுள்ளது என்பதை தெரிவுபடுத்தி விட்டது. 

2024ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6-6.8 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள் ளது. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் பொருளா தார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று கூறி யதிலிருந்து இறங்கி வந்துள்ளனர். 23 கோடிக்கும் மேலான அளவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் மக்கள் வாடும் நிலையில், உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவது மட்டுமே வளர்ச்சி யாகிவிடாது. 

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியக்கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. மொத்தத்தில் குடியரசுத் தலைவர் உரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெருமிதத் திற்கு நேர்மாறானதாகவே பொருளாதார ஆய்வறிக்கை அமைந்துள்ளது.

;