மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதோடு, கட்டுக் கடங்காத விலைவாசி உயர்வால் மக்களின் வாழ்க்கை நிலை மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் கூட உண்மையான பொரு ளாதார நிலையை பிரதிபலிக்கவில்லை.
உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பருப்பு வகைகள், காய்கறி கள், பால் பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால் வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவை அதிகரித்து சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவ ரங்களின்படி 2023-24 முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8.1 சதவீதம் என்று கூறப்பட்டாலும், இது தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசின் செல வினங்களால் ஏற்பட்ட தற்காலிக உயர்வே ஆகும்.
உண்மையில் தனியார் துறை முதலீடுகள் வெகுவாக குறைந்துள்ளன. வேலையின்மை உச்சத்தில் உள்ளது. விவசாய துறையில் வளர்ச்சி இல்லை. சிறு, குறு தொழில்கள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் மட்டுமே உயர்ந்துள்ளது. பங்குச் சந்தை யின் உயர்வு பொய்யான பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது.
மோடி அரசு இந்த ஆண்டு ஜூலையில் அறி வித்த முழு பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உரு வாக்கம், நடுத்தர வர்க்கத்திற்கான திட்டங்கள் என்ற பெயரில் வரி விலக்குகள் அறிவித்தாலும், அவை பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ, நுகர் வோர் செலவினத்தை ஊக்குவிக்கவோ போதுமா னதாக இல்லை. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ₹11.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெற்று வாக்குறுதியாகவே உள்ளது.
வரும் 2025 ஆம் ஆண்டில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதே நிதி நிபுணர்களின் கணிப்பு. உணவுப் பொருட்களின் விலை உயர்வு தொடரும் நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகி தத்தை குறைக்க வாய்ப்பில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலால் ஏற்படக்கூடிய உலக ளாவிய பொருளாதார அதிர்வுகளும் இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும்.
இந்த நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத் தவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மக்கள் நலன் சார்ந்த மாற்று பொருளாதாரக் கொள்கை கள் அவசியமாகிறது. கார்ப்பரேட் ஆதரவு கொள் கைகளை கைவிட்டு, பொதுத்துறையை வலுப் படுத்தி, விவசாயம் மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் கொள்கைகளை கொண்டு வருவதே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.