headlines

img

ஐநா பொதுச் செயலாளரின் அர்த்தமுள்ள கவலை

ஆபத்தான நிலையில் உலகம் உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ  குட்டரெஸ் எச்சரித்துள்ளதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. நவீன தாராளமயமாக்கல் கொள்கை காரணமாக இந்த பூமிப் பந்தின் இருத்தலே கேள்விக்குறியாகியுள்ளது.

முதலாளித்துவ நாடுகளின் லாபவெறி காரணமாக வளர்முக நாடுகள் மட்டுமின்றி அந்தந்த நாடுகளில் பெரும்பகுதி மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணி யில் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில்  ஐநா பொதுச் செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தில் கொள்ளத்தக்கது. 

புவி அரசியலை மையமாகக் கொண்ட ஜி20 நாடுகளிடம் சர்வதேச நாடுகள் சில சிக்கி யுள்ளன. இதில் ஒரு கட்டத்தில் ஜி2 உலகமாக உருவெடுத்து தற்போது எதற்கும் முடிவுகாண முடியாத நிலையை அடைந்துள்ளது. பேச்சு வார்த்தை மூலமே அனைத்துப் பிரச்சனைக ளுக்கும் தீர்வுகாண முடியும். உலக ஒற்றுமை ஏற்பட வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோவியத் யூனியன் மற்றும் சோசலிச முகாம் வலுவாக இருந்த காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் அடாவடிப் போக்கை ஓரளவு தடுக்க முடிந்தது. சோசலிச முகாம் பலவீனமடைந்த பிறகு அமெரிக்க வல்லரசு வைத்ததே சட்டம் என்றாயிற்று. குறிப்பாக சுற்றுச்சூழலை பாதித்ததில் அமெ ரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்திய போர்களும், ஈவி ரக்கமின்றி இயற்கை வளத்தை சூறையாடியதும் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்புகளிலிருந்து உலகம் ஓர ளவு மீண்டு வந்து கொண்டிருந்த போதும் அந்த கொடிய தொற்று நோய் கற்றுத் தந்த பாடத்தை உலக நாடுகள் உணர்ந்ததாக தெரியவில்லை. 

உலகில் 80சதவீத பசுமை இல்ல வாயு ஜி20 நாடுகளிலிருந்துதான் வெளியாகிறது. ஆனால் அந்த நாடுகள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் குறைவான பங்களிப்பையே அளித்து வருகின்றன என்று ஐநா பொதுச் செயலாளர் பொருத்தமாகவே சுட்டிக்காட்டியுள் ளார். சுற்றுச்சூழல் தொடர்புடைய மாநாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சேதாரத்திற்கு பொறுப்பேற்பதில்லை. அதற்கான இழப்பீட்டை யும் தர முன்வருவதில்லை. மாறாக வளர்முக நாடுகள் மீதே இதற்கான சுமையையும் சுமத்த முயல்வதே நடைமுறையாகிவிட்டது. பிரச்ச னைக்கு காரணமானவர்களிடமே தீர்வுகாணும் பொறுப்பும் விடப்படும் அவலநிலை நீடிக்கிறது. 

இந்த நிலையில் ஐநா சபையும் கூட எந்த வொரு பிரச்சனையிலும் வலுவான தலை யீட்டை செய்ய முடியவில்லை. ஒரு கருத்துச் சொல்கிற அமைப்பாகவே சுருங்கிவிடுகிறது. இதற்கு ஐநா சபை ஜனநாயகப்படுத்தப்படுவதும், வல்லரசுகளின் கைப்பாவையாகச் செயல்படு வது மாற்றப்படுவதும் அவசியமாகும். 

 

;