headlines

img

அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  அதி கரித்து வருகிறது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இந் நோய்த்தொற்று அதிகமாகக் காணப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் சோதனையை அதிகப் படுத்தினால்  உண்மை நிலை தெரியவரும்.  இதில் மத்திய மாநில அரசுகள் அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது.

சென்னையில் சமூகப்பரவல் தொடங்கி விட்டதாக  தொற்று நோயியல் நிபுணர்களும் மருத்துவ வல்லுநர்களும் சொல்கிறார்கள். ஆனால் அதையும் முதலமைச்சரும் அமைச்சர் களும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதில் என்ன கவுரவமோ தெரியவில்லை.

கொரோனா என்பது ஒரு நகரிலோ அல்லது ஒரு மாநிலத்திலோ பரவியுள்ள நோய் அல்ல, உலகம் முழுவதும் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் மனிதக் குலத்திற்கு பெரும் சவாலாக உரு வெடுத்துள்ள இந்த நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது. அதற்குப் பொதுமக்களும் ஒத்து ழைக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் மாநிலத்தில்  நோய்த்தொற்று அதிகமாக இருப்பதையும் உயிரிழப்போர் எண் ணிக்கையையும் அரசு  மறைக்க முற்படுவது தான் வேதனையாக உள்ளது. 

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்யாமல் அவர்கள் வெளியே வருவதால் தான் நோய்த்தொற்று அதிகமாகி விடுகிறது என்று சொல்லிப் பயனில்லை. அவர்கள் வெளியே வரா மல் இருக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்தால் இந்த நோய்த்தொற்று பரவலைக் குறைக்கமுடியும்.

ஊரடங்கு காலத்தில் சம்பளம் வழங்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நிறுவனங் களே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. வேலைசெய்யாவிட்டால் ஊதியம் வழங்கமாட்டோம் என்று கூறும் முதலா ளிகளுக்கு  ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக் கும்போது தன் குடும்பத்தைக்  காப்பாற்ற வேலை க்குச் செல்லவேண்டிய கட்டாயம் தொழிலாளிக்கு ஏற்படுகிறது. அப்படி வேலைக்குச் செல்லும் போது அவர்களது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

நோய்த்தொற்றைத் தடுக்க மக்கள் கூடும் இடங்களி லும் தொழிலாளர்கள் அதிகமாகப் புழங்கும் தொழிற்பேட்டைகளிலும் தொழிற்சாலைகளி லும் ரயில் நிலையங்கள்,  பேருந்து நிலையங்கள், சந்தைகளிலும் கிருமிநாசினி மற்றும் கைகழுவ ஏற்பாடுகளும் செய்யவேண்டும், இலவசமாக முகக்கவசங்களை வழங்கவேண்டும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு இடமில்லாத போது தனியார் மருத்துவமனைகளில் ஆகும் செலவை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏழை மக்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.7500 வீதம் 6 மாதத்திற்கு  வழங்கவேண்டும், சம்பளமும் வேலையும் இல்லாத நிலையில்  பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

;