headlines

img

அண்ணலுக்கு மரணமில்லை

2018, மார்ச் 5- திரிபுராவின் பெலோனியா நகரின் மையப்பகுதியில் கம்பீரமாக அமைந்தி ருந்த மாமேதை லெனின் சிலை தகர்க்கப்பட்ட அதே காட்சிகள், தமிழகத்தில் 2019 ஆகஸ்ட் 25 அன்று மனதை உலுக்கும் விதமாக அரங்கேறி யிருக்கின்றன. அதே கூப்பாடு; இதைத்தான் எதிர் பார்த்தோம், முழுமையாக உடைத்து நொறுக்கு என்று பின்னால் இருந்து இயக்குகிற குரல்; எப்ப டிப்பட்ட மாமேதையின் சிலையை வாளாலும் சுத்தியாலும் நொறுக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற மானுட அறிவை இழந்துவிட்ட - வெறி யூட்டப்பட்ட கும்பல். காணொலிக் காட்சிகள் அதிர்ச்சியைத் தருகின்றன. வேதாரணியம் நகரின் மையப்பகுதியில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் சிலை தகர்க்கப்பட்ட சம்பவத்தை, இதே சிலையை எப்படியேனும் அங்கிருந்து அகற்ற வேண்டுமென்று கடந்த சில ஆண்டுக ளாக கூச்சலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்களின் செயல்பாடு களோடு இணைத்துப் பார்க்காமல் விட முடியாது. 

மதவெறியர்களுக்கு சாதி வெறியர்கள் தேவைப்படுகிறார்கள். மதவெறி தனது எதேச்சதி காரத்தை நிலைநிறுத்துவதற்காக நாடெங்கும் பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்களுக்கெதிராகவும், உள்ளூர் மக்களை குடியேறிய மக்களுக்கெதிராகவும், பிற்படுத் தப்பட்ட மக்களை தலித் மற்றும் பழங்குடி மக்க ளுக்கெதிராகவும் தூண்டி விடுவது; இருதரப்பை யும் எதிரெதிராக நிறுத்துவது தேவைப்படுகிறது. இதன் நீட்சியாக ஒட்டு மொத்த சமூகத்தையும் அது எதிரெதிரே நிற்பவர்கள் மீது அதிகபட்ச வெறுப்பையும், வன்முறையையும் பரஸ்பரம் தூண்டி விடுகிறது. சொத்துக்களை சூறையாடச் செய்கிறது. பெண்களை கூட்டமாக வன்புணர்வு செய்வதை நியாயப்படுத்துகிறது. மக்கள் சமூகங்க ளை, அவர்களது அன்றாட வயிற்றுப்பாட்டு பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பி பரஸ்பரம் வெறிகொண்டவர்களாக மாற்றி, காட்டுமிராண்டி களாக ஆக்குகிறது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதவாத பாசிச எதேச்சதிகாரம் என்பது ஒட்டு மொத்த மக்கள் சமூகத்தையே மனிதத்தன்மை யற்றதாக மாற்றும் அபாயமிக்கது என்று இடை விடாமல் சுட்டிக்காட்டி வருகிறது. 

சமூகத்தை மனிதத்தன்மையற்றதாக மாற்றுகிற பல்வேறு காட்சிகளில் ஒன்றுதான், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் மகத் தான அடையாளங்களாக, மாபெரும் ஈர்ப்பு சக்திகளாக திகழ்கிற மாமேதைகள் லெனின், அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சிலைகளை தகர்ப்பது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தனது பதவியையே தூக்கியெறிந்த மாபெரும் தேசிய தலைவர் அண்ணல் அம்பேத்கர். அத்த கைய மகத்தான வரலாறுகளையெல்லாம், வர லாற்றின் குப்பைத் தொட்டிகளில் தூக்கியெ றியப்பட்ட சாதிவெறி பிடித்த - மதவெறி பிடித்த கும்பல்களை தாண்டி ஒட்டுமொத்த மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. ஒட்டு மொத்த உழைப்பாளிகளையும் ஒன்றிணைக்க வேண்டியிருக்கிறது. அதை உயர்த்திப்பிடித்த அண்ணலுக்கு என்றும் மரணமில்லை.  

;