headlines

img

தில்லி வெறியாட்டம்: பாஜக அரசின் வன்மம்

தில்லி வன்முறை வெறியாட்டத்திற்கு காவல் துறையின் மெத்தனமே காரணம் என உச்ச நீதி மன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கி றது. மேலும் காவல்துறையின் கடமையை செய்ய மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த தலையீடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண் டோருக்கு சிறிய ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தி யாவை மதரீதியாக பிளவு படுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார் கூட்டம்  போராடுப வர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்ட விழ்த்துவிட்டு வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகம், அசாம்  மாநிலங்க ளில் மட்டும் போராடுபவர்களுக்கு எதிராக நடை பெற்றிருக்கும் வன்முறையில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் அடுத்த கட்டமாக தற்போது  தேசத்தின் தலைநகர் தில்லியில் திட்டமிட்டு வன்முறையை  அரங்கேற்றியிருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் உதவியுடன் இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டிருக்கிறது.  குறிப்பாக பாஜக தலை வர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் காவல்துறை முன்னிலையிலேயே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருக்கின்ற னர்.அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை. அதன் பின்னர் திட்டமிட்டபடி இஸ்லாமி யர்கள் போராடும் பகுதி அருகே டிராக்டர்களில் கற்களை கொண்டு வந்து குவிக்கும் போதும் காவல் துறை தடுக்கவில்லை. அதனை தொடர்ந்தே கலவரம் துவங்கி தில்லியே பற்றி எரிந்தது. இப்படி 21 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

அப்போதும் கூட உயிருக்கு ஊசலாடும்அப்பாவி களைக் காப்பாற்ற மருத்துவமனைகளுக்கு காவல் துறை உதவவில்லை என்று  பல மருத்துவர்கள்  சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வேதனை தெரி வித்தனர். இந்த நிலையிலேயே தில்லி உயர்நீதி மன்ற சிறப்பு அமர்வு கவலையுடன் நள்ளிரவில் கூடி நிலைமையை பரிசீலித்து காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்தே  துடிதுடித்த பலஉயிர் களை காப்பாற்ற வழி ஏற்படுத்தி கொடுத்தனர். 

அதைவிடக் கொடுமை செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில், பாஜக தலைவர் கபில் மிஷ்ராவின் மதவெறிப் பேச்சை பார்க்கவில்லை என நீதிபதிகளிடம் கூறினர். அதற்கு“தில்லி போலீசாரின் நிலையைப் பார்த்து வியப்பாக இருக்கிறது” என கூறிய நீதிபதிகள் நீதிமன்றத்திலேயே வீடியோவை  போட்டுக்காட்டி வழக்கு பதிய உத்தரவிட்டனர். 

பாஜகவின் வன்முறை வெறியாட்டத்திற்கு தில்லி காவல்துறை எவ்வளவு உடந்தையாக இருக் கிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு ஏதேனும் வேண்டுமோ? கடந்த 3 நாட்களாக  உலகமே கபில் மிஷ்ராவின் வெறிப்பேச்சை சமூக வலைத்தளத்தில் பார்த்து  கைது செய்யக் கோரியது. இப்போதாவது உண்மையான வன்முறையா ளர்களை பாரபட்சமின்றி  கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

;