headlines

img

ஒரு சகாப்தத்தின் முடிவு

இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், சர்வதேச கிரிக்கெட் கவுன் சிலின் 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், பதற்றமடையாத அணித் தலைவர், அதிரடி ஆட்டக்காரர் என பல பெருமைகளுக்கு உரியவர் மகேந்திரசிங் தோனி.

இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய தோனி இந்தியக் கிரிக்கெட் உலகில் அதிக ஆண்டுகள் வெற்றிகரமாக கோலோச்சிய கேப்டன்களில் ஒருவர். தலைசிறந்த தலைமைப் பண்பால் அணியில் அனைவரையும் அரவணை த்துச் சென்றார். இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது.  2011 உலகக்கோப்பையை சச்சின் டெண்டுல்கருடன்  சேர்ந்து வென்றார்.  சர்வ தேச கிரிக்கெட்டில் சாம்பியனாக விளங்கும் விராட் கோலியை அரவணைத்து வளர்த்துவிட்டார்.  தோனியிடமிருந்து பலவிஷயங்களை கோலி கற்றுக் கொண்டார். அது இக்கட்டான நேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

“கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. தோனியை யாருடனும் ஒப்பிடுவது கடினம். அந்த ளவுக்கு அவர் வேறுபட்டுத் திகழ்கிறார்’’ என்ற முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியின் வார்த் தைகள் உண்மையானவை.  2015 உலகக்கோப்பை அரையிறுதியில் தோனி ரன் அவுட் ஆனார்,  அந்த ஆட்டத்தில்  14 பந்துகளில் இந்தியாவின் கனவு தகர்ந்தது. அதே நிலைமை நான்கு ஆண்டு கள் கழித்து கடந்தாண்டு மான்செஸ்டரிலும் இந்திய அணிக்கு நேர்ந்தது.

இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போன அந்தப் போட்டிதான் தோனியின் கடைசி  சர்வதேச கிரிக்கெட் போட்டியாகவும் அமைந்து விட்டது. இந்தநேரத்தில் தான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜார்க்கண்ட் தேர்த லில் பாஜக தோற்பது உறுதி என அக்கட்சியின் தலைமைக்கு உறுதியாக தெரிந்தவுடன் தோனியை பாஜகவில் சேர்த்து அந்த தோல்வியை ஈடுகட்ட லாம் என திட்டமிட்டனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா  பல முறை முயன்றும் தோனி பிடிகொடுக்க வில்லை. எதிர்பார்த்தது போலவே பாஜக தோல்வி யடைந்தது. பாஜகவில் சேர மறுத்ததோடு ஆதரித்து பிரச்சாரமும் செய்ய விருப்பமில்லை என்று தோனி கூறிவிட்டார். இதுபாஜக தலைமைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அப்படியொரு சூழலில்தான் பிசிசிஐ வெளி யிட்ட இந்திய அணிக்கான வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து தோனி நீக்கப்பட்டார்.   பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தனது அதி காரத்தை பயன்படுத்தி அமித்ஷா தனது மகன் ஜெய் ஷாவை  செயலாளராக நியமித்து விட்டார். ஜெய் ஷா மூலமாக தோனியை  அவமதித்து விட்டனர்.

கிரிக்கெட்டில் இந்தியாவின் புகழை உச்சத் திற்கு கொண்டு சென்ற மகத்தான வீரரை வாரியம் அவமதிப் பதை எதிர்த்து இன்னாள் முன்னாள் வீரர்கள் கூட பேசமுடியவில்லை. காரணம் இந்திய கிரிக்கெட் வாரியத்திலும் பாஜகவின் ஆட்டம் தொடங்கி யிருக்கிறது.  ஒரு போட்டியை நடத்தி தோனி கவுர வமாக விடைபெற அனுமதிக்கவேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறியிருப்பது நியாயமான கோரிக்கை. தோனி தற்போது ஓய்வுபெறக்கூடாது என்று விரும் பும்  கோடிக்கணக்கான ரசிகர்களும் அவரது முடிவை ஜீரணித்துக்கொண்டு  இத்தகைய ஒரு வழி யனுப்பு விழாவைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

;