headlines

img

கலவர யாத்திரைக்கு தடை விதித்தது சரியே....

தமிழக பாஜக நடத்துவதாக அறிவித்திருந்த வேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என்றுஉயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. மாநில அரசுதம்முடைய இந்த முடிவில் எந்த நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் உறுதி காட்ட வேண்டுமென்பதே தமிழக மக்களின் விருப்பமாகும். 

நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் துவங்கிடிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் முடியும்வகையில் வேல் யாத்திரை நடத்தப் போவதாக தமிழக பாஜக அறிவித்திருந்தது. இதன்மூலம் தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய சக்தியாக வளரும் என்று அதனுடைய தலைவர்கள் பலரும்அறிவித்திருந்ததிலேயே இந்த யாத்திரையின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.இந்நிலையில் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டுமென்று பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள்இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தியிருந்தன. இந்த பின்னணியில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கொரோனா பெருந் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில்உள்ளது என்றும், யாத்திரை நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள டிசம்பர் 6ஆம் தேதிபாபர் மசூதி இடிப்பு தினமாக உள்ளதால் சட்டம்ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மிகச் சரியாகக் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந் தொற்று அபாயம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணமடைபவர்கள் என ஆபத்து தொடர்ந்துவருகிறது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலைமனதில் கொண்டு முழுக்க முழுக்க குறுகிய அரசியல் நோக்கத்துடன் பாஜக இந்த யாத்திரையைஅறிவித்தது. இதன்மூலம் கலவரத்தை உருவாக்குவதும், மதரீதியாக மக்களை பிரிக்கும்கெடுமதியும் மட்டுமே அவர்களது குறிக்கோளாக இருந்தது.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால நெரிசலால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது. ஆனால் இதுகுறித்தெல்லாம் பாஜகவுக்கு கவலையில்லை. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின்போதும் கலவரம் செய்ய முயன்று தோற்றனர். அப்போது கிடைக்காத வாய்ப்பை வேல் யாத்திரை என்கிற பெயரில் நிறைவேற்றிக்கொள்ள திட்டமிட்டனர். மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பான வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால்இவர்களது நோக்கம் பக்தி அல்ல, கலவரப் புத்தி.இதனை புரிந்து கொண்டு தமிழக அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. மத்திய ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி நிர்ப்பந்தித்தாலும்தமிழகத்தின் அமைதியையும் நலனையும் கருத்தில் கொண்டு மாநில அரசு தனது நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்.

;