headlines

img

பட்டியலின் நோக்கம் என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து அசாமின் 19 லட்சத்து 6ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்திய குடிமக்கள் பலரும் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாஜக நீண்டகாலமாக இப்பிரச்சனையை எழுப்பி வந்துள்ளது. தற்போது தங்களது நிகழ்ச்சிநிரலை இடம்பெற்றுள்ள விசயங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் அவசரக் கோலமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் இடம்பெறாதவர்கள் 174 நாட்களுக்குள் வெளிநாட்டினருக்கான தீர்ப்பா யத்தில் விண்ணப்பித்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களை இந்திய குடிமக்கள் என்று  உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க முடியா தவர்கள் ஆறுமாத காலத்திற்குள் நாடு கடத்தப் படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் பட்டியலில் இடம்பெறாமல் பெயர்விட்டுப்போனவர்கள் தடுப்புக் காவல் முகாம்களில் வைக்கப்படு வார்கள் என்பது எந்தவகையிலும் நியாயமான தல்ல. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.  இந்திய குடிமக்கள் பலரும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில் அனைவரையும் தடுப்புக் காவல் முகாம்களுக்கு அனுப்புவது அர்த்தமற்றது.

பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் மிகவும் குறுகிய கண்ணோட்டத்திலேயே குறிப்பாக மத அடிப்படையிலேயே மத்திய பாஜக அரசு இந்தப் பிரச்சனையை அணுகுகிறது. அந்தப் பகுதியில் நிரந்தரமான பகைமை நிலைகொள்வதையே பாஜக விரும்புகிறது. அதற்கேற்பவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படுகின்றன. 19லட்சம் பேர் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கை, இது அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று இப்பொழுதே சில அமைப்புகள் குரல் எழுப்புகின்றன. ஒரு இலக்கு வைத்து அதன்படி பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக உள்ளது.

உண்மையில் இந்தப் பட்டியல் தயாரிப்பின் நோக்கம் இந்திய குடிமக்களை கண்டறிவது அல்ல, மாறாக தங்களுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதின் ஒரு பகுதியாகவே இத்தகைய வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது.  இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் மக்கள் நீதிபெற அனைத்து வாய்ப்பும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் நிலையில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையிலேயே மத்திய பாஜக கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன.

;