headlines

img

பாஜக ஆணையமாக மாறும் தேர்தல் ஆணையம்?

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. ஜனநாயகத்தின் தன்மை யிலும், தரத்திலும் பல ஏற்ற இறக்கங்கள், விமர்ச னங்கள் இருந்தாலும் இன்றளவும்  ஜனநாயக நாடாகவே இருந்து வருகிறது. அதற்கு  இந்திய தேர்தல் நடைமுறையும் மிக முக்கிய காரணம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கையை  ஏற்படுத்துவதாக இருக் கிறது. குறிப்பாக மத்தியில் நரேந்திர மோடி பிரதம ராக பதவியேற்ற பின்னர்,  இந்திய தேர்தல் ஆணையம் பாஜக ஆதரவு ஆணையமாக மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாகி வருவதை பார்க்க முடிகிறது.

சிக்கிம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கில் உச்ச நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு தேர்தலில் 6 ஆண்டு களுக்கு போட்டியிட முடியாத நிலையில் இருந்த வர். அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தவுடன் தேர்தல் ஆணையம் அவர் போட்டியிடும் வகை யில் 6 ஆண்டு என்பதை  1 ஆண்டு 1 மாதம் என விலக்கு அளித்தது. அதன் பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தனது அமைச்சரவையை பாஜகவுடன் பகிர்ந்து கொண் டார். அப்போதே  தேர்தல் ஆணையத்தின் அப் பட்டமான பாஜக ஆதரவு நிலை வெளிப்பட்டது. 

அதைவிட மிக முக்கிய குற்றச்சாட்டு,  2019 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கிற்கும் எண்ணப்பட்ட வாக்கிற்கும் இடையே 373  தொகுதி களில் வேறுபாடு இருந்தது. ஆனால் இந்த குற்றச் சாட்டை இதுவரை தேர்தல் ஆணையம் புறந் தள்ளவில்லை. அதோடு அதற்கு இதுவரை தீர்வு காணப்படவுமில்லை. தற்போது அடுத்த சதி அரங்கேற்றம்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோராவுக்கு அடுத்து அப்பத விக்கு வர இருப்பவர் அசோக் லவாசா. இவர் தலை மையில்தான்  அடுத்து நடைபெறவிருக்கும் , உத்த ரப்பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா, கேரளா, தமிழகம் சட்ட மன்ற தேர்தல்கள் நடைபெறவிருந்தன. அப்படி நடைபெறும் தேர்தலில் பாஜக அவ்வளவு எளி தாக முறைகேடுகளில் ஈடுபட முடியாது என பலரும் கருதி வந்தனர். இந்நிலையில்தான் திடீ ரென அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கி யின் துணைத் தலைவராக மாற்றப்பட்டிருக்கிறார். 

காரணம், கடந்த நாடாளுமன்றத்  தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச் சர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதி களை மீறி  மக்களிடையே மதரீதியாக பிரிவி னையை தூண்டும் வகையில் பேசி வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டனர். இந்த புகார்களை  விசாரித்த தேர்தல்  ஆணையர்களில் இருவர் விதி களை மீறவில்லை என மோடிக்கு  நற்சான்றிதழ் கொடுத்தனர்.  ஆனால் லவாசா நற்சான்றி தழ் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அசோக் லவாசா  மோடி அரசால் குறிவைக்கப் பட்டிருந்தார். ஜனநாயகத்தையே குழிதோண்டி புதைத்து சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த துடிக்கும் மோடிக்கு தேர்தல் ஆணையம் முழு மையாக துணை போவது வெட்கக்கேடானது. 

;