headlines

img

கையேந்தும் மாநிலங்கள்; ஏறி மிதிக்கும் மத்திய அரசு

கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மாநில அரசுகளின் பெரும் முயற்சி தேவைப்படுகிறது. ஏனெனில் அவைதான் இந்த நோயையும் மற்றும் அத னுடன் இணைந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகளையும் எதிர்கொள்வதற்கு மனித வளங்க ளை அணிதிரட்டுவதையும், பிரதான செலவுகளைச் செய்வ தையும் மேற்கொண்டிருக்கின்றன.

மாநிலங்கள், சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு உணவு தானியங்க ளையும் அத்தியாவசியப் பொருள்களையும் இலவசமாக அளிக்க வேண்டி இருக்கிறது. மேலும் சமூக முடக்கம் ஐந்தா வது வாரத்திற்குள் சென்றுவிட்டதால்,  உழைக்கும் மக்க ளுக்கும் சமூகத்தின் இதர பிரிவினருக்கும் வருமான ஆதர வையும் அளிக்க வேண்டியிருக்கிறது.

 மாநிலங்களுக்கு  அற்பமான நிதி ஒதுக்கீடு

ஆனால், அனைத்து மாநில அரசாங்கங்களுமே இந்தப் போராட்டத்தில் கடும் நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டி ருப்பதால் அவை முடமாக்கப்பட்டிருக்கின்றன. சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் மத்திய அரசால் மாநிலங்க ளுக்கு மிகவும் சொற்பமாக அளிக்கப்பட்ட 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு என்பதுகூட உண்மையில் மாநிலங்க ளுக்கு அளிக்கப்பட்ட கூடுதலான நிதி ஒதுக்கீடு கிடையாது.  இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை, பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் தவணை போன்று பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான். மாநில அரசு கள் இதுவரை பெற்றிருக்கும் தொகை என்பது, அவர்களுக்கு தேசிய சுகாதாரத் திட்டம் (National Health Mission) மற்றும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகையில் நிலுவையாக இருந்த பகுதி ஆகியவையேயாகும்.

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு, கொரானா தொற்றைச் சமாளிப்பதற்காக கூடுதலான நிதி எதுவும் அளிக்காதது மட்டு மல்ல,  பல்வேறு இனங்களில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய தொகைகளைக்கூட அளிக்காமல் இருக்கிறது. இவற்றில் ஒன்று, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை, குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கானது இன்னும் அளிக்கப்படவில்லை. மற்றொன்று, மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத்திட்டத்தின் (MNREGS) கீழ்  மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய்களாகும்.

கொரோனா வைரஸ் நெருக்கடி,  மாநிலங்கள் எந்த அள விற்கு போதிய நிதியின்றி கையேந்தும் நிலையில் இருக் கின்றன என்பதை, வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கி றது. மத்திய அரசு அதிகாரங்களையும், வளங்களையும் மாநிலங்களிடமிருந்து தொடர்ந்து பறித்துக்கொண்டிருப்ப தன் விளைவாக, மாநிலங்களிடமிருந்து கொஞ்சநஞ்ச நிதி ஆதாரங்களையும் மத்திய அரசு தன்வசப்படுத்திக் கொண்டு விட்டது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபின், மாநிலங்கள் பொருள்கள் மீது எவ்விதமான வரியையும் விதிப்பதற்கு  அதிகாரம் கிடையாது என்பதுடன், மத்திய அரசு, ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆதிக்க நிலையில் இருந்து வருவதால், வரி விதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் எதுவும் கூறவும் முடி யாது.  இவற்றுடன் மத்திய மோடி அரசாங்கம், மாநில அர சாங்கங்களை ஏறிமிதித்து சவாரி செய்யக்கூடிய எதேச்சதி காரப் பாதையில் செல்கிறது.

வருவாய் வாசல்களை அடைத்துவிட்டு...

அதிகாரம் குவிக்கப்பட்ட மத்திய அரசின் இத்தகைய ஜனநாயக விரோத அணுகுமுறைக்கு ஓர் உதாரணம், கார்ப்ப ரேட் சமூகப் பொறுப்பு நிதியத்திலிருந்து, (CSR-Corporate Social Responsibility Fund) மாநில முதல்வர்களின் நிதி யத்திற்குத் தொகை அளித்திட மறுப்பதாகும். சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிஎம்கேர் (PM CARE) நிதியத்திலிருந்து தான், பங்களிப்புகள் கொடுக்கப்படும். கோவிட் நிவாரணப் பங்களிப்பில்கூட, மாநிலங்கள் பாரபட்சம் காட்டப்பட்டன.

தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்துவந்த நவீன தாராளமயக் கொள்கைகள், நிதி மூலதனத்தின் நலன்க ளுக்கு ஏதுவான பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றி வந்தன. எனவே,  மத்திய அரசுக்கும் மாநில அர சாங்கங்களுக்கும் இடையே ஒரு கடுமையான நிதிப் பற்றாக் குறை இருக்கும் விதத்தில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் (FRBM-Fiscal Responsibility and Budget Management Act) கீழ் மாநிலங்களின் செலவினம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP- State Gross Domestic Product) யில் 3 சதவீத வரையறையைத் தாண்ட முடியாது. மேலும் மாநில அரசுகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புவாசல்களையும் அடைத்துவிட்டது.

வகைப்படுத்தப்பட்ட சில மக்கள் பிரிவினருக்கு ரொக்க மாக பணம் டெபாசிட் செய்வது, ரேஷன் கோட்டா உயர்த்தப்பட்டி ருத்தல், ஓய்வூதியங்கள் மற்றும் இதர பயன்பாட்டுகளுக்காக முன்கூட்டியே அளிக்கப்பட்ட தொகை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களுக்கான நடவடிக்கைகள் போன்ற மத்திய அரசு அறிவித்த அனைத்துத் தொகுப்புகளுக்கும் மாநிலங்கள் பல ஏற்கனவே மத்திய அரசு அறிவித்ததைவிட அதிகமாகவே அளித்திருக்கின்றன. மாநி லங்களின் வருவாய் இனங்கள் வீழ்ச்சியடைந்திருக்கக்கூடிய நிலையில் அல்லது காலியாகிவிட்ட நிலையில் இவற்றுக் கான செலவினங்கள் வந்திருக்கின்றன. மத்திய அரசிட மிருந்து எவ்விதமான உதவியும் வராத நிலையில், சில மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தையே வெட்டி யிருக்கின்றன. சில வளர்ச்சித் திட்டங்களை நிறுத்தி வைத்திருக்கின்றன.

கடன் வலைக்குள்  தள்ளப்படும் மாநிலங்கள்

இவற்றின் விளைவாக மாநில அரசுகள், மத்திய அரசிட மிருந்து அதிக அளவில் கடன் கோரும் நிலைக்குத்  தள்ளப்பட்டி ருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு மத்திய அரசு கடன் வழங்கும்போது  அதீதமான வட்டி விகிதத்தை விதித்துக் கொண்டிருக்கின்றன. கேரள நிதியமைச்சர், தாமஸ் ஐசக்,  “மாநில அரசு 6,000 கோடி ரூபாய் தன்னுடைய மாநில வளர்ச்சிக்காக, 15 ஆண்டு காலத்தில் திருப்பிச்செலுத்தி டக்கூடிய விதத்தில் கடன் கோரும்போது, அதற்கு மத்திய அரசு 8.96 சதவீத வட்டி விதிக்கிறது. இது மாநிலத்தை கடன் வலைக் குள் தள்ளிவிடும்.” என்று கூறியிருக்கிறார். எனவே, “மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கிட அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கோரியிருக்கிறார்.

பிரதமருடன் ஏப்ரல் 11 அன்று காணொலிக் காட்சிமூலம் நடைபெற்ற மாநாட்டில், அனைத்து முதலமைச்சர்களும் மாநிலங்கள் தங்கள் வருவாயை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவாக உடனடி உதவி மற்றும் நடவடிக்கைகளைக் கோரி னார்கள். ஆனால், சமூக முடக்கக் காலம் மேலும் 18 நாட்க ளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும்கூட, மத்திய அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானது.

நாடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத் தில் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. இதனை எதிர் கொண்டு முறியடித்திட மாநில அரசுகளுக்கு, பொருளாதார ரீதி யாகவும், பொருள்கள் அளித்தும் மத்திய அரசு உதவிடா விட்டால், நாம் மனித உயிர்கள் மற்றும் பொருளாதார இழப்பு கள் என்கிற விதத்தில் கடும் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

எனவே மத்திய அரசு மேலும் காலதாமதம் எதுவும் செய்திடா மல் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் (borrowing) பெற்று, மத்திய அரசு, கோவிட்-19 சம்பந்தமாக பணிகளுக் காக மாநிலங்களுக்கு மானியங்கள் அளித்திட வேண்டும்.

மாநிலங்கள் கடன் (borrowing) வாங்கும் உச்சவரம்பினை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP), 5 சத வீதத்திற்கு உயர்த்திட வேண்டும். 

மாநில அரசுகள் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடி யாகக் கடன் வாங்குவதற்கு வழிவகை செய்திட வேண்டும். 

மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பல்வேறு இனங்க ளில் கடன்பட்டிருக்கிற நிலுவைத் தொகைகளை முழுமையாக உடனடியாக அளித்திட வேண்டும்.

மத்திய அரசு, மாநில அரசுகளை முழுமையாகவும் பரஸ்பரக் கூட்டுப் பங்காளர்களாகவும் கருதி செயல்பட்டால்  தான் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அது நினைத்துக்கொண்டிருக்கிற வெற்றியை ஈட்டிட முடியும்.

(ஏப்ரல் 15, 2020) 
தமிழில் : ச.வீரமணி

;