headlines

img

பாஜகவின் பாசமும் வேஷமும்....

இப்போது தேர்தல் காலமாதலால் தமிழ்நாட்டு மக்கள் மீது அதீத பாசம் கொண்டுள்ளனர் பாஜகவினரும் மோடியும் அமித்ஷாவும். பங்குனி உத்தர விழாவுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழிலேயே டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.  அவர்களது போலிப்பாசம் மகாபாரத திருதராஷ்டிரனின் ‘அணைத்துக் கொல்லுதல்’ வகையைச் சேர்ந்ததுஎன்பதை தமிழக மக்கள் நன்றாகப் புரிந்தேவைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களது இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறவாய்ப்பில்லையென தெரிந்தும் அதை தொடரத்தான் செய்கிறார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி மனதின் குரல்நிகழ்ச்சியின் போது கோவையை குறிவைத்திருக்கிறார். அங்கு அவர்களது கட்சியின் வானதி திருநாவுக்கரசு போட்டியிடுவது அவரது மனதுக்குள் ஓடிக் கொண்டுதானே இருக்கும். பேருந்து நடத்து
நர் மாரிமுத்து யோகநாதன், பயணச்சீட்டு கொடுக்கையில் மரக்கன்றுகளையும் இலவசமாக அளித்துவருகிறார். அவரது ஊக்கமளிக்கும் சேவைக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நாமும் பாராட்டலாம்.ஆனால் தனி ஒரு நபராக ஒரு காட்டையேஉருவாக்கியுள்ள ஓட்டுநர் மாரிமுத்து யோகநாதனைப் பாராட்டும் மோடி அதற்கு நேர்மாறாக அல்லவா தமிழகத்திற்கு தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் சென்னையின் கலங்கரை விளக்கத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது பல்வேறு கலங்கரை விளக்கங்களின் பராமரிப்பாளர்கள் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றுகசிந்துருகியிருக்கிறார். இதுவும் கூட சென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும்அவரது கட்சியின் வேட்பாளர் குஷ்புவுக்கு உதவுமா என்று தான் அந்தக் கண்ணீரையும் சிந்தியிருக்கிறார். 

உண்மையில் சுனாமி போன்ற பேராபத்து வரும்போது அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சதுப்புநிலக்காடுகள் என்றும் அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படும் இயற்கையின் கொடைதான் அப்போது உதவியது. இனிமேலும் உதவிடும். ஆனால் மோடியின் மத்திய அரசோ அத்தகைய அலையாத்திக் காடுகள் 2000 ஏக்கர்க்கும் அதிகமாக உள்ள பகுதியை, காட்டுப்பள்ளி பகுதியை அவரது நண்பர் அதானிக்காக கபளீகரம் செய்வது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா, தீங்கில்லையா?

பாஜக அரசாங்கம் பதவியேற்றதிலிருந்தே தனியார்மயமாக்குவதில் அதிதீவிரம் காட்டி வருகிறது. காட்டுப்பள்ளி பகுதியை துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் நண்பருக்கு தாரைவார்ப்பதற்காக, அலையாத்திக் காடு என்பதை மணல்காடு என்று மத்திய சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மதிப்பீட்டுக் குழு வகைமாற்றி கொடுத்திருக்கிறது. இதனால் இயற்கைச் சமநிலை, அந்தப்பகுதி மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள்அனைவரும் பாதிக்கப்படுவது பற்றி மோடிக்கென்ன கவலை? அதானி, அம்பானிகளின் ஆனந்தம் தானே மோடிக்குத் தேவை!

மோடி அரசின் செயல்பாடுகள் இப்படி இருக்கும்போது அதை மறைப்பதற்குத்தான் யோகநாதன் போன்றவர்களைப் பாராட்டுவது. ஆனால்தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவதுஅவர்கள் தான். ஆயிரம் விளக்கல்ல, ஒரு விளக்கும் கிடைக்காது; தாமரையும் மலராது. 

;