headlines

img

உலகத் தத்துவமும் உள்ளூர்த் தவளையும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய அரசியல் சட்ட பொறுப்பை மறந்து அத்துமீறி பேசி வருவதோடு, தன்னுடைய அறியாமையை யும் போதாமையையும் அன்றாடம் வெளிப் படுத்தி வருகிறார். 

‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ போல பேசி வரும் அவர் சனாதன அதர்மத்தை நியாயப்படுத்தி பேசினார். அதையடுத்து திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள ஆன்மீகக் கருத்துக்களை திருத்தியவர் ஜி.யு.போப் என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். 

அங்கே சுற்றி, இங்கே சுற்றி இப்போது மாமேதை காரல் மார்க்ஸ் கருத்துக்களையும் இழிவுபடுத்த துணிந்துவிட்டார். இந்தியாவில் மேற்கத்திய கருத்தியலை புகுத்தியவர் காரல் மார்க்ஸ் என்று அவர் பேசியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை பொறுத்தவரை கம்யூனிசத் தத்துவம்தான் கருத்தியல் ரீதியாக அவர்களது முதல் எதிரி. சாவர்க்கர், கோல்வால்கர் துவங்கி பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா வரை இதை வெளிப்படுத்த தயங்கியதில்லை. ஆர்எஸ்எஸ் கூடாரத்தில் பயிற்சி பெற்றவரான ஆர்.என்.ரவியும், மாமேதை மார்க்சின் மகத்தான சிந்தனைகளை சிறுமைப்படுத்த முயன்றுள்ளார்.

இந்தியாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும் சில சக்திகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதற்கு அறிவார்ந்த சமூகம் என்று அழைக்கப் படுகிற சில சக்திகள் உதவின. அவர்களில் ஒருவர் காரல் மார்க்ஸ் என்று மார்க்சியத்தின் மீதான தன்னுடைய ஜென்மப் பகையை வெளிப்படுத்தி யுள்ளார்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் நிலப்பிர புத்துவத்திற்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சாதியப் பிளவுகளுக்கு எதி ராகவும், சமரசமில்லாத போராட்டத்தை நடத்தி வருகிறது. இவர் உயர்த்திப் பிடிக்கும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதனத்திற்கு கம்யூ னிசத் தத்துவம் முற்றிலும் முரணானது. மனிதனை  மனிதன் சுரண்டாத, எல்லோரும் இன்ப நிலை எய்து கிற தத்துவம்தான் மார்க்சியம். ஆனால் இவரும் ஆர்எஸ்எஸ் பரிவாரமும் தாங்கிப் பிடிக்கிற சனா தனம் சுரண்டலுக்கு முட்டுக்கொடுப்பது, மனிதர்களை பிறப்பு அடிப்படையில் பிரித்து வைப்பது.

ஆர்எஸ்எஸ் பரிவாரம், ஹிட்லர் வகையறா வின் பாசிசத்தைக் கொண்டாடுவது. உலகின் பாசிச அபாயத்தை முறியடித்து மனிதகுலத்தை காப்பாற்றிய பெருமை மார்க்சியத்திற்கே உண்டு. அந்த ஹிட்லரின் தத்துவமான பாசிசத்தை இந்தி யாவிலும் நிலைநிறுத்த முயலும் கூட்டத்தைச் சேர்ந்த இவர் மார்க்சியத்தை மேற்கத்திய கருத்தி யல் என்று கூறுவது வெட்கக்கேடானது.

பசியில்லாத உலகெனும் மானுடக் கனவை நனவாக்கும் வகையில் அறிவியல்பூர்வமாக பொதுவுடைமை சமூகம் அமைப்பதற்கான வழி களை கண்டறிந்து சொன்னதுதான் மார்க்சின் மகத்துவம். முடை நாற்றம் வீசும் கிணற்றுக்குள் வாழும் தவளைகளுக்கு அதன் மகத்துவம் புரியாது.

;