headlines

img

அவ்வளவு மென்மையா?

கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான ஊடகங்களில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி புகழ் பாடும் செய்திகளும், படங்க ளும் அவரது சுட்டுரைகளுமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அவை யாவும் மோடி ஏதோ மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி விட்டதாக தூக்கிப் பிடித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.  ஹூஸ்டன் நகரில் அவரது நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் கலந்து கொண்டு தன் பங்குக்கு மோடி புகழ் பாடியுள்ளார். அப்போது அவர் கடந்த பத்தாண்டு களில் 30 கோடி மக்களை வறுமையிலிருந்து இந்தியா மீட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

டிரம்ப் கூறியுள்ள பத்து ஆண்டுகள் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் சுமார் ஐந்து ஆண்டு கால ஆட்சியையும் சேர்த்து குறிப்பிடுவதாகத்தானே உள்ளது. ஆனால், ஒரே ஒரு பொருத்தம் இரண்டு ஆட்சிகளுமே உலகமயம், தனியார்மயம்- தாராள மயக் கொள்கைகளை விடாப்பிடியாக அமல் படுத்தியவை. ஆனால் மோடி மிக வேகம். வறுமையை ஒழிப்பதில் மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அப்படி ஒன்றும் சாதனை எதுவும் நிகழ்த்திடவில்லை. ஏனெனில் அவர் 15 ஆண்டு காலம் முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்திலேயே வறுமையை ஒழிப்பது நடைபெறவில்லை. 2013 செப்டம்பர் 16 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை யின்படி குஜராத் மாநிலத்தில் வறுமைக்கோட்டு க்கு கீழே உள்ளவர்கள் 16.63 சதவீதமாகும்.

மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சியில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் அனை வரும் சுகமா? என நலம் விசாரித்திருக்கிறார் என்று பெருமை பாடின ஊடகங்கள். அது மட்டுமின்றி, ஹூஸ்டன் விமான நிலையத்தில் மோடியை வரவேற்க அமெரிக்க பிரதிநிதி ஒருவர் கொடுத்த பூங்கொத்திலிருந்து கீழே விழுந்த பூவை சற்றும் யோசிக்காமல் குனிந்து எடுத்துக் கொண்டார் என்று தூய்மை இந்தியா பிரச்சா ரத்தின் தூதுவர் எனப் புகழ் பாடின.

கீழே விழுந்த பூவை எடுத்ததற்கே இத்தனை புகழ் பாடுகிறார்கள் என்றால், ஒரு வன்முறை யின் போதோ, விபத்தின் போதோ அடிபட்ட ஓர் உயிரைக் காப்பாற்றியிருந்தால் எவ்வாறெல்லாம் புகழ்ந்திருப்பார்கள்? ஆனால்  பூவை நசுக்கி விடாத மென்மையான உள்ளத்துக்கு சொந் தக்காரர் என்று கூறப்படும் மோடி 2002ஆம்ஆண்டு அவரது ஆட்சியில் நடந்த வன்முறை தாக்குத லின்போது நடவடிக்கை எடுக்காததால் எத்தனை ஆயிரம் சிறுபான்மை இன மக்களின் உயிரை பறிப்பதற்கு காரணமாக இருந்தார் என்பது உலகறியும்.  அதனால்தான்,  அந்தக் காலத்தில் பிரதம ராக இருந்த அவரது கட்சிக்காரரான வாஜ்பாய், நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன் என்று மோடியை விமர்சனம் செய்தார். அதையடுத்தே அமெரிக்கா செல்ல மோடிக்கு அந்நாடு விசா வழங்க மறுத்துவிட்டது. அதை தற்போது நினைவு கூர வேண்டியுள்ளது. 2002 வன்முறை பற்றி  மோடியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, ஒரு நாய் காரில் அடிபட்டால் என்ன செய்வோ மோ அப்படித்தான் நடந்து கொண்டதாக கூறியதும் நினைவுக்கு வருகிறது.

;