headlines

img

ஆளுநர்கள் பிடியிலிருந்து பல்கலைக்கழகங்கள் மீளட்டும்!

உதகையில் பல்கலைக்கழக துணை வேந்தர் களின் இரண்டு நாள் மாநாட்டை ஆளுநர் ஆர். என்.ரவி நடத்துகிறார். கல்வி என்பது ஒத்திசை வுப் பட்டியலில் இருக்கும் நிலையில் ஆளுநர் தன்னிச்சையாக இந்த மாநாட்டை கூட்டியி ருப்பது கண்டிக்கத்தக்கது. 

‘உயர் கல்வி நிறுவனங்களில் பாடப்புத்தகங்க ளை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுவதாக கூறப் பட்ட போதும், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை புகுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது. 

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள் கையை ஏற்க இயலாது என்றும், தமிழ்நாட்டிற் கென்று தனித்த கல்விக் கொள்கையை உரு வாக்கப் போவதாகவும் அறிவித்து அதற்கென்று ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ள நிலை யில், ஒன்றிய அரசு கல்விக் கொள்கையின் முகவராக மாறி ஆளுநர் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறார்.

தமிழக பல்கலைக்கழகங்களில் இணை வேந்தராக செயல்படும் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் இந்த மாநாட்டில் பங்கேற்க வில்லை. ஆனால் பன்னாட்டு தொழில்நுட்ப தனியார் நிறுவனமான சூ ஹோ பல்கலைக் கழகத்தின் நிறுவனரும், ஆர்எஸ்எஸ் ஆதரவா ளருமான ஸ்ரீதர் வேம்பு மாநாட்டில் பங்கேற்ப தாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இதேபோன்று ஏற்கெனவே பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டை ஆளுநர் தன்னிச்சையாக நடத்தியுள்ளார். கல்வித் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஒரு மாநில அரசுக்கெதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி வருவது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது.

இதேபோன்ற ஒரு மாநாட்டை கடந்த ஏப்ரல் 25, 26 தேதிகளில் ஆளுநர் நடத்தினார். இந்த மாநாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று துணை வேந்தர்களை உசுப்பி விட்டார். இப்போது பாடத் திட்டங்களை தமிழில் மொழி பெயர்ப்பது தொடர்பாக என்ற பெயரில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார். 

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வேண்டு மென்று தமிழக சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் மசோதாவை கிடப்பில் போட் டுள்ளது போல இந்த மசோதாவையும் ஆளுநர் முடக்கி வைத்துள்ளார். குறிப்பிட்ட கால வரை யறைக்குள் மசோதாக்கள் தொடர்பான முடிவை தெரிவிக்க வேண்டும் என ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த மசோதாக்கள் குறித்த தனது முடிவை ஆளுநர் தெரிவிக்க வேண்டும். கேரள அரசும் இதே போன்ற மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர்களின் பிடியிலிருந்து பல்கலைக்கழ கங்களை மீட்கும் காலம் வந்துவிட்டது.

;