headlines

img

இனிதான் கூடுதல் எச்சரிக்கை தேவை

கொரோனா நோய்த் தொற்று காரணமாக அறி விக்கப்பட்ட நான்காவது கட்ட ஊரடங்கு வரும் ஞாயிறு முதல் முடிவடையவுள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட லாம் என்று மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

முதல்கட்ட ஊரடங்கின்போது அறிவிக்கப் பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்ச மாக தளர்த்திக் கொள்ளப்பட்டன. உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் துவங்கியுள்ளது. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் சில மாநிலங்க ளில் துவங்கியுள்ளன.

மே இறுதியிலும் ஜூன், ஜூலை மாதங்களி லும் கொரோனா தொற்று மேலும் தீவிரமாகலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் இதை சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக தெரியவில்லை.

துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது போன்று கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்த விபரங்கள் தற்போது முழுமையாக அறிவிக்கப் படுவதில்லை. பரிசோதனைகளை பெயரளவுக்கு நடத்துவதன் மூலம் பாதிப்பு அளவை குறைத்துக்  காட்டுவதிலேயே அரசுகள் குறியாக உள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும் பிக் கொண்டிருப்பதன் மூலம் நோய்த் தொற்று அபாயம் புதிய உச்சத்தை எட்டும் என்று எச்சரிக் கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களால் நோய்த் தொற்று மேலும் பரவலாகக்கூடும். இவ்வாறு புலம் பெயர் தொழிலாளர்களை பரிசோதிப்பது, தனி மைப்படுத்துவது, நோய்த் தொற்று உள்ளவர்க ளுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவற்றை செம்மையாக செய்வதற்கான ஏற்பாடுகளும் முழு மையாக இல்லை. பெயரளவுக்கே உள்ளன.

இத்தகைய அலட்சியத்தால் நோய்த் தொற்று அதிகரிப்பதோடு இறப்பு விகிதங்களும் அதி கரிக்கும் அபாயம் உள்ளது. ஆனால் கொரோனா  நோய்த் தொற்றுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ளுமாறு கூறுவதன் மூலம் தன்னுடைய பொறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக அரசுகள் கை கழுவி வருகின்றன.

இது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்தப் பின்னணியில் பரிசோதனைகளை அதிகரிப்பது, நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களை தனி மைப்படுத்துவது, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர்களை உயர்த்துவது, தனியார் மருத்துவமனைகளை முழுமையாக கொரோனா சிகிச்சைக்கு பயன் படுத்துவது போன்றவை அவசியமாகிறது. இல்லையென்றால் மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்ததுபோன்று பெருமளவிலான மரணங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது. இதைச் செய்யாமல் பிரதமர் மோடி இதை வெற்றிகரமாக சமாளித்து விட்டார் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது வெறும் ஏமாற்றும் வேலையாகும்.

;