headlines

img

தடம் மாறும் இந்திய ரயில்வே

இந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது.பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும்  தனியார் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பதுதான் அது. தொடக்கத்தில்  நெரிசல் இல்லா வழித்தடத் திலும் சுற்றுலாத்தலங்கள் உள்ள வழித்தடத்தி லும் அனுமதி அளிக்கப்படும். படிப்படியாக தங்க நற்கார பாதை எனப்படும் சென்னை- மும்பை, மும்பை- தில்லி, தில்லி -ஹவுரா, ஹவுரா- சென்னை வழித்தடத்தில் இது அமல்படுத்தப்படும். இந்த தங்கநாற்கர சாலையின் மொத்த தூரம் தற்போது இருக்கும் தண்டவாளத்தில் 20 விழுக்காடுதான். ஆனால் 55 விழுக்காடு வண்டி கள் இந்தபாதையில் ஓடுகின்றன என்றால் அந்த அளவுக்கு எப்போதும் பரபரப்பாக ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும் பாதைகளாகும்.இந்த பாதை யில் தனியாரை அனுமதித்தாலும் அதுபுதிய ரயில்களாக இயக்கமுடியாது. தற்போது ஓடும் வண்டிகளில் ஒருபகுதியை தனியாருக்கு அளித்தால்தான் முடியும். 

ரயில்வேயை தனியார்மயமாக்க 2017ல்  மோடி அரசு ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைக்க முடிவு செய்தது. தனியாருக்கு சமவாய்ப்பு  அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவும் எடுக்கப் பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால் ஓடுகிற வண்டிகளில் பிரதான வழித்தடங்களில் பாதிய ளவு தனியாருக்கு தாரைவார்க்கப்படும். சாமானியர்கள் இனி ரயில்களில் பயணம் செய்வது என்பது கடினமான ஒன்றாக மாறப்போ கிறது. காரணம் எரிவாயு மானியம் போல் ரயில் கட்டணத்தில் உள்ள 47 விழுக்காடு மானியத்தை விட்டுக்கொடுக்கும்படி பயணிகளிடம் விருப்பம் கேட்கப்போவதாக அறிவித்துள்ளது. மானியம் ரத்து செய்யப்பட்டால் 53 ரூபாய் டிக்கெட்100 ரூபாயாக உயரும்.  இது எரிவாயு மானியத்தை ஒழித்துக்கட்டியது போன்றதே. இந்த திட்டமும் விவேக் தேவ்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்றுதான். 

ஏற்கனவே பல ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் ஒன்றாக இணைத்தார்கள். மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய மூன்றே நாட்களில்  அதாவது 3.6.2019 அன்று ரயில்வேக்கு சொந்தமாக சென்னை இராய புரம் உள்பட நாடு முழுவதும் உள்ள 5  அச்சகங்க ளை மூடிவிடவும் அதில் உள்ள எந்திரங்களை விற்று விடவும் முடிவு செய்தது. இதன் அடுத்த கட்டமாக  ரயில்வே பள்ளிகளும் ரயில்வே மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம் உள்ளது.  ஏற்கனவே இந்த இரண்டையும் மூடும்படி விவேக் தேவ்ராய் கமிட்டி மோடி அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. 40 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட புதிய மோடி அரசின் நிதி அயோக் முடிவெடுத்தி ருப்பதோடு  இதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.  மோடி அரசின் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்திட அரசியல் கட்சிகளும் ரயில்வே தொழிற்சங்கங்களும் நாட்டு மக்களும் வலு வாக குரலெழுப்பவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

;