headlines

img

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் கொடூர இன்னல்கள்

 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் நூறு கோடி மாற்றுத் திறனாளி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனை தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உலக அளவில் 37 லட்சத்து 56ஆயிரத்து 423 ஆக உயர்ந் துள்ளது. 2 லட்சத்து 59 ஆயிரத்து 449 பேர் உயிரி ழந்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் இந்த நோயினால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து  ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கொரோனா நோய்த் தொற்றினால் நூறு கோடி மாற்றுத் திறனாளிகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.  உடல் ரீதியான குறைபாடு உடைய இவர்கள் ஏற்கெனவே வறுமையினால் வாடி வருகின்ற னர். வன்முறை, புறக்கணிப்பு, அதிகார துஷ்பிரயோ கம் போன்ற பல்வேறு இன்னல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த நோய்த்தொற்றும், ஊரடங்கும் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன. உடல் ரீதி யாக குறைபாடு உடைய இவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது அது மற்றவர்களைவிட கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும். அது மரணத்தில் கூட முடிய வாய்ப்பி ருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பராமரிப்பு இல்லங்களில் வாழ்ந்து வருவோ ரில் உடல் குறைபாடு உடையவர்கள் வயதானவர் கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைப வர்களில் இவர்களது சதவீதம் 19 முதல் 72 வரை இருப்பதாக ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையும், சமத்துவமும் நிலைநிறுத்தப்படுவது எப்போதும் அவசியம் என்ற நிலையில், இது இன்றைய சூழலில் மிகவும் அவசியம் என்று ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.  ஆனால் இந்தியா உட்பட பல நாடுகள் மாற்றுத்திறனா ளிகள் பிரச்சனையை அணுகுவது என்பது மிகவும் மோசமாகவே உள்ளது. அவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவம் உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில் பெரும் இன்னல்களை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் விவரிக்க முடியாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் குறிப்பிட்டுள்ளது. அரசு துவக்கியுள்ள சிறப்பு ஹெல்ப் லைன் மூலமாக லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் பலன்பெற்றுள்ளது போன்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் உண்மை நிலை வேறாக உள்ளது என இந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பின்னணியில் வியாழனன்று அரசு அலு வலகங்களில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் நடத்த வேண்டி வந்தது. மத்திய அரசும் - மாநில அரசும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கூடுதல் பரிவோடு பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

;