headlines

img

தனியார் மருத்துவத்தின் நோக்கம் பணம்தான்

 நோயாளிகளை அழைத்து வருவதற்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியானதை அடுத்து,சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதார திட்ட இயக்குன ரகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனை பல சர்ச்சைக ளுக்கு பெயர்போனது .தமிழ்நாட்டில் உடல் உறுப்புதான முறைகேட்டில் இந்த மருத்துவ மனைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகள் வெளிநாட்டு நோயாளிக ளுக்கு பொருத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.  கடந்தாண்டு விபத்தில் காயமடைந்த கேரளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சேலம் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்பு கள் குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவம் பெற்று வந்த வெளி நாட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இது பற்றி தமிழக முதலமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் கூட எழுதியிருந்தார். ஆனால் விசாரணை என்ற பெயரில் அனைத்தும் மூடி மறைக்கப் பட்டது. உடல் உறுப்பு தானத்தில் நடைபெற்ற மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, அந்த மோசடியை நியாயப் படுத்தி ஊழலே நடக்கவில்லை என்று சான்றிதழ் அளித்திருந்தது. இந்த நிலையில் தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத்தேர்வால் தரமான மருத்துவக் கல்வி உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய பாஜக அரசு பீற்றிக்கொண்டிருந்தது. இது எவ்வளவு மோசடியானது என்பதை நீட்தேர்வில் நடை பெற்ற ஆள்மாறாட்டம் வெட்ட வெளிச்சமாக்கி யது. விசாரிக்க விசாரிக்க மேலும் மேலும் பல மாண வர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றால் மிகப் பெரிய அளவில் இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. நாமக்கல் கிரீன் பார்க் என்ற தனியார் பள்ளி யில் முக்கியமான பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையம் செயல்படும் அறை ஒன்றின் லாக்கரில் இருந்து கணக்கில் காட்டப்படாத 30 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதேபோல், சட்ட விரோத வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்து களுக்கான ஆவணங்கள், தனிப்பட்ட முதலீடு கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருக்கின் றன. இதனை மத்திய நேரடி வரிகள் வாரியமே அறிவித்துவிட்டது. நீட்தேர்வு மோசடிகள் தொ டர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடத் தப்படவேண்டும். அதில் தனியார் பள்ளி தவறி ழைத்திருப்பது தெரியவந்தால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு தயங்கக் கூடாது, மேலும் நிர்வாகிகள் மீதும் குற்றவியல் வழக்கும் தொடர வேண்டும்.தேசிய நுழைவுத்தேர்வு மருத்துவக்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் என்ற வாதமெல்லாம் வெறும் வெத்துவேட்டுதான்.

;