headlines

img

குடியரசுத் தலைவர் உரை உண்மைக்கு மூடுதிரை

 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடை பெற்ற நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவர் உரை, தேர்தல் பிரச்சார நேரத்தில் பிரதமர் மோடி ஆற்றி வந்த உரைகளின் நீட்சியாகவே அமைந்துள்ளது. இன்றைக்கு நாடும், நாட்டு மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, மக்களுடைய கவனத்தை திசைதிருப்பும் வகையிலான அம்சங்களையே இந்த உரை முன்வைக்கிறது. தமிழகம் உட்பட நாட்டின் பெரும்பகுதியில் வறட்சி தாண்டவமாடுகிறது. குடிநீருக்கே மக்கள் அன்றாடம் அல்லல்படுகின்றனர். ஆனால் குடியரசுத் தலைவர் உரையின் பெரும்பகுதி எல்லை தாண்டிய பயங்கரவாதம், பாதுகாப்பு என்பது குறித்தே பேசுகிறது. பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை உலக நாடுகள் ஆதரிப்பதாக இந்த உரை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் உண்மையில் பயங்கரவாத ஒழிப்பில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதுகூட பயங்கரவாதிகளுக்கு பணம் கிடைப் பது இதன் மூலம் தடுக்கப்படும் என்று கூறப்பட் டது. ஆனால் புல்வாமா தாக்குதல் உள்பட பயங்கர வாதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வில்லை என்பதே நிதர்சனமாகும்.  பெண்களின் சம உரிமைகளை உறுதி செய்வ தற்கு முத்தலாக், நிக்கா ஹவாலா போன்ற சமூகத் தீமைகள் குறைக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரை கூறுகிறது. இது குறிப்பிட்ட சமூ கத்தினரை குறி வைத்து கூறப்படுவது மட்டுமே ஆகும். ஆனால் உண்மையில் இந்தியாவில் அனைத்து பகுதிப் பெண்களின் பாதுகாப்பு, சம உரிமை, சமூக நீதி பெரும் கேள்விக்குறியாக மாறி யிருப்பது குறித்து இந்த உரை கவலை கொள்ள வில்லை. உண்மையில் பெண்கள் மீது இந்த அரசுக்கு அக்கறையிருக்குமானால், மகளிர்க் கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தி ருக்க வேண்டும். ஆனால் அதுகுறித்து இந்த உரை யில் குறைந்தபட்சம் உறுதிமொழி கூட வழங்கப்படவில்லை. கடந்த தேர்தலின்போது விவசாய விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை வழங்கப் படும் என்று கூறப்பட்டதில் ஒரு அடி கூட எடுத்து வைக்கப்படவில்லை. தற்போது புதிதாக விவசாயத் துறையில் 25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று தேன் தடவப்படுகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதுதான் இப்போது நாட்டின் ஒரே பிரச்சனை போல குடி யரசுத்தலைவர் உரையில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இந்தத் திட்டம் நாட்டின் ஜன நாயகத்தை, கூட்டாட்சியை, பன்முகத்தன் மையை குழிதோண்டி புதைக்க முயலும் பாதகச் செயலாகும். காவிரி உள்ளிட்ட நதிகளை தூய்மை படுத்துவது குறித்தும் குடியரசுத் தலைவர் உரை யில் கூறப்பட்டுள்ளது. ஆறுகளில் நீர் ஓடுவதை முதலில் மோடி அரசு உறுதி செய்யட்டும்.

;