headlines

img

கூட்டாட்சிக்கு குழி தோண்டுவதா?

ஒரு இந்தியா, ஒரு தேர்தல் என்ற சூழ்ச்சி யோடு பாஜக இந்தியாவின் ஜனநாயகத்தை வேரறுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. மெல்ல மெல்ல ஜனநாயக ஆட்சி முறையில் இருந்து தேசத்தை சர்வாதிகார ஆட்சிமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு நடவ டிக்கைகளையும் திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது.

ஒரே தேர்தல் என்பதற்கு மோடி அரசு சொல்லும் காரணம் பொருளாதார வளர்ச்சி பாதிக்கிறது,  தேர்தல் செலவு அதிகமாகிறது என்பதுதான்.  ஆனால்  அதற்கு  எந்த விதமான ஆய்வோ, புள்ளி விபரங்களோ இல்லை.ஒரே தேர்தல்  முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் - ன்  திட்டம். அதனை அமலாக்க மோடி அரசு முழு வீச்சில் இறங்கியிருக்கிறது.   இந்த திட்டத்தின் மூலம் காஷ்மீருக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தை சீர்குலைக்கும் முயற்சியும் உள்ள டங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கும், சட்ட மன்றத்திற்கும்  ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அடிப்படையில் இந்திய கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிரானது ஆகும். 

நமது அரசமைப்பு சட்டத்தின் படி, மத்திய அர சோ, மாநில அரசோ ஒரு நம்பிக்கையில்லாத தீர்மானம் மூலமாகவோ, அல்லது நிதி சட்ட முன்வடிவின் மீதான வாக்கெடுப்பின் மூலம் தோல்வியடைந்தாலோ அந்த அரசு ஆட்சி செய்யும்  தார்மீக உரிமையை இழந்து விடுகிறது. மாற்று அரசு அமைக்க வேண்டும். அல்லது மீண்டும் தேர்தல் நடத்திட வேண்டும். ஒருவேளை ஒரே தேர்தல் என்ற  நிலையில் இது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் தேர்தல் நடைபெறாது. மக்கள் தேர்ந்தெடுத்தவர்களுக்கு மாறாக நியமனம் செய் யப்பட்டவர்களின் கையில் ஆட்சி அதிகாரம் சென்று விடும். அப்படியென்றால் மக்களாட்சி என்ற கோட் பாடே மறைமுகமாக குழிதோண்டி புதைக்கப் படும். மாநில சுயாட்சியும் பறிக்கப்படும். 

நிதி ஆயோக் விவாதத்திற்காக வெளியிட்டி ருக்கும் குறிப்பில் இது தெளிவாக்கப்பட்டிருக்கி றது. அதில் தவிர்க்க முடியாத காரணத்தால் மக்களவை கலைக்கப்பட்டால், மக்களவையின் எஞ்சிய காலம் குடியரசு தலைவரே ஆட்சி செய்ய லாம் என திருத்தம் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. இது கொல்லைப்புற வழி யாக குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டு வரும் கேடுகெட்ட செயல். 

ஒரே சமயத்தில் தேர்தல் என்பதன் பின்னணி யில்,  மாநிலங்களின் உரிமையை படிப்படியாக பறித்து, முழுக்க முழுக்க மத்திய அரசின் காலடி யில் சமர்ப்பிக்கும் வேலையாகும். இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை காணும்  மாபெரும் ஜனநாயக  நாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும்  ஒரு தனி இயல்பு இருக்கிறது. அதன் இயல்பை சிதைத்து மறைமுகமாக இந்து ராஷ்டிரத்தை வலிந்து திணிக்கும் ஏற்பாடே ஒரே சமயத்தில் தேர்தல். 

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த நமது நாட்டின் அரசியல் ஜனநாயகமே நிலைத்து நீடித்திட முடியும். மாறாக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஏற்பாடே ஆகும்.

;