headlines

img

காத்திருக்கும் படுகுழி

உலகம் முழுவதிலும் பொருளாதாரத்தின் இரண்டாவது பாதி நிதியாண்டு முழுவதும் பரவலான தொற்றுநோய் துயரம், அதனால் தீவிரமடைந்துள்ள நெருக்கடி, வேலையின்மை, இதனால் ஏற்படும் உள்நாட்டு பிரச்சனைகள், அதை எதிர்கொள்வதற்காக ஆளும் அரசுகள் கட்டவிழ்த்துவிடும் தாக்குதல்கள் என்றே கடந்து செல்லப் போகிறது. இன்னும் குறிப்பாக உலகின் பொருளாதாரமாக திகழ்கிற அமெரிக்கா மிக நேரடியாக அதிகபட்ச பாதிப்பை சந்தித்து, விரைவில் மீள முடியாத மிகப்பெரும் பொருளா தாரப் பெரும் மந்தத்திற்குள் சிக்கும் என்பதும் உறுதியாகியிருக்கிறது.  இதை, அமெரிக்க பொருளாதாரம் தொடர்பாக உலக வங்கியும் பன்னாட்டு நிதி நிறு வனமும் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ள விபரங்களே உறுதி செய்கின்றன. உலக வங்கி விபரங்களின் படி, 2019ல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி 21.43 டிரில்லியன் டாலரை எட்டியிருந் தது. இது ஒட்டுமொத்த உலகின் ஜிடிபி(மொத்த உள்நாட்டு உற்பத்தி) யில் 24.42 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்து வெறும் 8 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய வளர்ச்சி விகிதத்தை 2 சதவீதம் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கடும் நெருக்கடியான நிலை நீடித்து வரும் சூழலில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் 2 சதவீதம் வீழ்ச்சி என்பது முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மனிதத் துயரத்தை உருவாக்கும்.  இந்த நிலைமைகளை உணர்ந்து உடனடி யாக சரிசெய்துகொள்ளவோ, மக்களை மீட்கவோ  டிரம்ப் நிர்வாகம் தயாராக இல்லை. மாறாக, நாடே கொரோனா தொற்றின் கோரப்பிடியில் சிக்கி யுள்ள நிலையிலும், வீழ்ச்சியடைந்துள்ள வேலை வாய்ப்பை ஈடுகட்டவோ, பொருட்களுக்கான சந்தை கிராக்கியை தூக்கி நிறுத்தவோ எந்த ஒரு சிறு முயற்சியும் மேற்கொள்ளாமல் பெரும் கார்ப்பரேட் மகா கோடீஸ்வரர்களின் பைகளை நிரப்பும் மீட்பு திட்டங்களை மட்டும் தீவிரமாக அமலாக்கி வருகிறது; மறுபுறத்தில் சீனாவுடனான வர்த்தக மோதலை நிதித்துறை சார்ந்த பிரிவுகளுக்கும் டிரம்ப் நிர்வாகம் விரிவு படுத்தியுள்ளது.

இது அமெரிக்காவுக்கே பாதக மானது. ஏனென்றால் அமெரிக்கப் பொருளா தாரம் பெருவாரியாக நுகர்பொருள் சார்ந்தே இருக்கிறது; உலகில் மிக அதிகமான நுகர்பொருள் சந்தை அமெரிக்காவே. இவை மட்டுமல்ல, ஜூலை மாதம் அமெரிக்கா வில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்ட த்தை எட்டியது. சில வாரங்களாக உச்சநிலையி லிருந்து சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற  போதிலும் இன்னும் தொற்று பரவல் வேகம் குறையவில்லை. உலகம் முழுவதும் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமெரிக்க மக்களே. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அளவிட முடியாதவை. வேலையின்மை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சிறு-குறு தொழில்களை முற்றாக ஒழித்துவிட்டு மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சி மீதான கவனம் அதிகரித்துள்ளது. இவை யனைத்துமே உலகின் முதல் பெரும் பொருளா தாரத்தை படுகுழியில் தள்ளக்காத்திருக்கின்றன.

;