headlines

img

ஒரு கோடியைத் தாண்டி...   

 உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு ஞாயிறன்று 1 கோடியைத் தாண்டி, பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. பலியானோர் எண்ணிக்கை 5லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்கள்  பெரும் பாதிப்புகளைச் சந்தித்து நிற்கின்றன. இந்நாடுகளில், ரஷ்யா கொரோனா மரண விகிதத்தை கட்டுப்படுத்துவதில் கணிசமான முன் னேற்றத்தை எட்டியுள்ளது. எனினும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்து வதிலும், மரண விகிதத்தை கட்டுப்படுத்துவதி லும் மிகப்பெரும் தோல்வியை அடைந்துள்ளன.  இந்த மூன்று நாடுகளையும் ஒப்பிட்டு பேரா சிரியர் விஜய் பிரசாத் உள்ளிட்ட சர்வதேச அர சியல் ஆய்வாளர்கள் பல்வேறு விபரங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரேசில் ஜனாதிபதி பொல்சானரோ, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் அறிவிப்புகள், நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி யிருக்கின்றன.

எந்தத் திட்டமிடலும் இல்லாத ஊரடங்குகள், அவற்றால் பலன் கிடைக்கத் துவங்கும்முன்பே எந்த முன்யோசனையும் இல்லாமல் ஊரடங்கு தளர்த்தல் மற்றும் அனை வரையும் பணிக்குத் திரும்பச் செய்தல் என தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட நட வடிக்கைகள் இந்த நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வேகத்தை பெரும் அலையாக மாற்றியுள்ளன.  அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு கணிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதை சற்றும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான வேலைகளை டிரம்ப் நிர்வாகம் செய்யவில்லை. மாறாக, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கூப்பாடுகளுக்கு செவிசாய்த்து, பெருவாரியான பகுதிகளில் ஊரடங்கு தளர்வு மற்றும் தொழிலாளர்களை பலவந்தமாக பணிக்குத் திரும்பச் செய்திருப்பது போன்ற நடவடிக்கைகள் கொரோனா பரவலை இன்னும் பெரிய அலையாக மாற்றியிருக்கிறது. கொரோனாவை தடுப்பதற்காக தொழில்நிறு வனங்களை மூடினால், கொரோனாவால் ஏற்படப் போகும் பயங்கரத்தைவிட இது பெரும் துயரமாக மாறும் என்று அமெரிக்க பெருமுதலாளிகளின் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழு வதும், இதுவரையிலும் கோடானுகோடி உழைப் பாளிகளின் உதிரத்தால் விளைந்த பெரும் லாபத்தை சுரண்டிக் கொழுத்திருக்கிற பெரும் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கொரோனா பரவிய இந்த வெறும் மூன்று மாத  காலத்தில் உற்பத்தியும் லாபமும் வீழ்ந்து விட்டது என்று புலம்பித் தள்ளுகின்றன; இது காறும் குவித்து வைத்த லாபத்திலிருந்து தங்களது தொழிலாளர்களுக்கு, கொரோனா தொற்றி லிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமென்ற  எண்ணத்தோடு ஒரு சிறு பகுதியைக் கூட கொடுப்பதற்கு தயாராக இல்லை. மாறாக உயிர்  போனாலும் லாபமே முக்கியம் என்று கருது கிறார்கள்; அதன் பொருட்டே பரவலைக் கட்டுப்படுத்தாமல் பெரும் தொழிற்கூடங்களை திறக்கிறார்கள்... இதுதான் முதலாளித்துவம்.

;