headlines

img

முகநூலின் முகவிலாசம்

இந்தியாவில்  சமூக வலைத்தளங்களின் மூலம் மிகப்பெரிய ஒரு சார்பு கருத்துருவாக்கத் தை உருவாக்கும் தளமாக இன்று முகநூல்  மாற்றப் பட்டிருக்கிறது. உலக அளவில் முகநூலை அதிக ளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் சதித் திட்டத்திற்கு  முகநூல் நிறுவனம் துணைபோவது வெட்கக் கேடானது.

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளி யிட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் முகநூல் நிறுவனம் எப்படி  பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் ஆதரவாகச் செயல்பட்டு வரு கிறது என்பது அம்பலமாகியிருக்கிறது. ஏற்கனவே உ.பி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சங்பரிவார் அமைப்புகள் முகநூல் மூலம் வதந்தி யைப் பரப்பி அதன் மூலம் கலவரத்தைக் கட்ட விழ்த்து விட்டன. அப்போதும் கூட அந்த வதந்தி கள் முகநூல் பக்கங்களில் பெருமளவில் நீக்கப்பட வில்லை.  சங்பரிவார் அமைப்பினரின் வெறுப்பு  பேச்சுக்களை நீக்க மறுத்திருப்பதோடு அதனைப் பரந்த அளவில் கொண்டு செல்லவும் முகநூல் நிறு வனம் துணைபோயிருக்கிறது. அதே நிலை தற்போது தீவிரமடைந்திருக்கிறது.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிரான  மாற்றுக் கருத்துக்களை யும் பரவாமல் பார்ப்பதும் நடக்கிறது. கேரவன் பத்திரிகை அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஊழல் குறித்த பதிவை முகநூல் நிறு வனம் வெளியிட மறுத்ததோடு,  அந்த பத்திரி கையின் முகநூல் பக்கத்தைப் பின்தொடர்பவர்க ளுக்குச் செல்லவிடாமல் தடுத்திருக்கிறது. இது போன்று முகநூல் நிறுவனத்தின் ஒருசார்பு நிலை குறித்த விபரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு முகநூலில் பாஜக எதிர்ப்பு பிரச்சாரங்கள் திட்டமிட்டுத் தடை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பாஜக எதிர்ப்பு முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த வலைப்பின்னலில் முக்கிய அங்கமாக இந்திய அளவில் முகநூல் நிறுவனத்தின் கொள்கை ரீதியிலான முக்கிய முடிவுகளை எடுக்கும் இடம் இருந்து வருகிறது.

அப்படி ஒருவர்தான் வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழ் குறிப்பிட்டிருக்கும் அங்கிதாஸ். இவர் ஏற்கனவே மோடிக்கு நெருக்கமான  ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றியவர். இவர் இணைந்து 2016 ல் உருவாக்கியிருக்கும் கொள்கை யில்  முகநூல் நிறுவனத்தின் கம்யூனிட்டி ஸ்டாண் டர்டுக்கு முரணாக ஒரு கட்டுரை வெளியானா லோ, பகிர்ந்தாலோ அதில் அபாயத்தை விட பொது ஆர்வம் அதிகமாக இருக்கும் என முகநூல் நிர்வாகிகள் நம்பினால்; அதை வெளியிடலாம் என்று இருக்கிறது. ஆக இவர்கள் நினைத்தால் எதை யும் தடுக்கவும் முடியும், வெளியிடவும் முடியும். 

இந்தியாவின்  ஜனநாயக நடைமுறையை தகர்த்தெறியும் பாஜகவின் கூட்டுச் சதியில் இணைந் திருக்கும் முகநூல் நிறுவனத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை அரசுத்துறை அல்லது தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகளுடன் முகநூல் நிறுவனம் செயல்படுவதைத் தடை செய்திட வேண்டும்.

;