headlines

மக்களிடம் செல்வோம்!

17ஆவது மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டில் மிகவும் கவலையை ஏற்படுத்தியிருக்கக்கூடிய அம்சம் என்பது, கட்சியின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தில் வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதாகும். மேற்கு வங்கத்தி லும், திரிபுராவிலும் வாக்குப் பங்கு விகிதத்தில் கூர்மையான வீழ்ச்சி ஏற் பட்டிருப்பது இதற்குப் பிரதான காரண மாகும். கேரளாவிலும் சற்றே குறைந்தி ருக்கிறது.   வாக்கு சதவீத இழப்புக்கு, மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும்  அதன் அமைப்புகள் மீதும் நேரடியாகவே வன்முறை வெறியாட்டங்கள் கட்ட விழ்த்து விடப்பட்டதும், பல இடங்களில் அதன் ஆதரவாளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்ததும், ஆட்சியாளர்கள் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதும் முக்கிய காரணங்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் இத்தகைய தாக்குதல்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகவே நடந்து கொண்டி ருக்கின்றன. இதுவரை நாம் 209 கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்க ளையும் இழந்திருக்கிறோம். எனினும், இவ்விரு மாநிலங்களிலும் கட்சியிலிருந்து வாக்காளர்களில் ஒரு சில பிரிவினர் கட்சியிலிருந்து விலகிச் செல்லக்கூடிய விதத்தில் ஓர் அரசியல் போக்கும் இருந்தது. மேலும், ஜூன் 7-9 தேதிகளில் நடை பெற்ற மத்தியக் குழுவின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க ஆய்வும்,  அடிப்படை வர்க்கங்களின் மத்தியில் ஆதரவில் ஒரு சரிவு ஏற்பட்டிருப்பதா கக் காட்டுகிறது. நாட்டிலுள்ள பல தொழில் மையங்களிலும் தொழிலா ளர் வர்க்கம் பாஜகவிற்கு வாக்களித்தி ருக்கிறது. தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிகள் செல்வாக்கு செலுத்தி வந்த பல இடங்களில்,  தமிழ்நாடு மற்றும்  கேரளா போன்று சில விதி விலக்குகள் தவிர அத்தகைய செல் வாக்கில் ஒரு சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, கட்சி மக்களிடம் மிகப்பெரிய அளவில் செல்ல வேண்டி யது அவசியமாகும். மத்தியக்குழு வகுத்துத் தந்துள்ள கடமைகளில், கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழி யர்களும் நம்மிடமிருந்து விலகிச் சென்றுள்ள மக்களைச் சந்தித்து, நம் கருத்துக்களை கேட்க வைத்திட வேண்டும் என்று கோரியிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்கக்கூடிய நடைமுறையின் தொடக்கமாக இது அமைந்திட வேண்டும். தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தி னரைச் சந்திக்க தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேற்குவங்கத்திலும், திரிபுரா விலும் வன்முறைக்கு உள்ளான பகுதி களில் வாழும் மக்களிடம் செல்வது என்பது அம்மக்களிடம் இணைப்பு களை மீண்டும் நிறுவுவதற்கான வழி யாக அமைந்திடும். இதனைத் தொடர்ந்து, அவ்விடங்களில் கட்சி ஸ்தாபனத்தைப் புதுப்பிப்பதற்காக எடுத்து வைக்கப்படும் முதல் அடியாக வும், இது அமைந்திடும். கட்சித் தலை மையும், முன்னணி ஊழியர்களும் இக்கடமையை மிகவும் ஆழமாகவும் மிகவும் உயிர்ப்புடனும் அணுகிட வேண்டும். இது, நாம் செய்திட்ட தவறு களையும் பலவீனங்களையும் சுய விமர்சனரீதியாக அடையாளம் கண்டு, அவற்றைக் களைந்து, மீண்டும் முன்னேற உதவிடும். ஒரு குறிப்பிட்ட கால வரைய றைக்குள், கொல்கத்தா பிளீனத்தின் முடிவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்து வது என்கிற மத்தியக் குழுவின் முடிவும் நம்மிடம் உள்ள பலவீனங்களைக் களைந்திடுவதற்கு மேலும் உதவிடும். கொல்கத்தா பிளீனம், வெகு மக்களு டன் உயிர்ப்புமிக்க தொடர்புகளின் தேவை குறித்தும், வெகுஜனத் தளத்தை (mass base) வலுப்படுத்து வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அழுத்தம் தந்திருந்தது. பிளீனம், ஸ்தாபன விஷயங்களோடு மட்டும் நின்றுவிடாமல், அரசியல்-ஸ்தாபனக் கடமைகள் சிலவற்றையும் வகுத்துத் தந்திருந்தது. உதாரணமாக, இந்துத்துவா தத்துவம் மற்றும் நடவ டிக்கைகளை முறியடித்திட தேவை யான அரசியல் –தத்துவார்த்தப் பணி யையும் அளித்திருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் கட்சியின் அனைத்து மட்டங்களிலும், பிளீனம் அளித்திட்ட திசைவழியில் பணி எதுவும் நடைபெறாததற்கு, ‘இடையில் தேர்தல் வேலைகள் குறுக்கிட்டுவிட்டன’ என்பது போன்று பல்வேறு கார ணங்கள் கூறப்பட்டன. எனினும், கட்சி யின் 21 மற்றும் 22ஆவது அகில இந்திய மாநாடுகள் சுட்டிக்காட்டியிருப்பது போல, ஆர்எஸ்எஸ்/பாஜக சக்திகளை தேர்தல் களத்தில் மட்டும் எதிர்கொண்டு முறியடித்திட முடியாது. அதனால் தான், பிளீனம் வகுத்துத்தந்த கடமை களை இனியும் காலதாமதம் செய்யாது அமல்படுத்திட வேண்டும். ஒட்டுமொத்த கட்சியும் மக்கள் மத்தியில் செல்ல வேண்டியிருக்கிறது, அவர்களிடமிருந்து கற்க வேண்டியி ருக்கிறது, இந்துத்துவா மதவெறிக்கு எதிராக, நவீன தாராளமய பொருளா தார சீர்திருத்தங்களுக்கு எதிராக, ஜன நாயகத்தின் மீதான எதேச்சாதிகாரத் தாக்குதல்களுக்கு எதிராக, புதுப் பிக்கப்பட்ட வீரியத்துடனும் உறுதியுட னும்,   போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. (ஜூன் 12, 2019)  தமிழில்: ச.வீரமணி

;