headlines

img

வாக்கு எண்ணிக்கையாவது நேர்மையாக நடக்கட்டும்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக அணி வெற்றி பெற்றுவிடும்என்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பெரும்பாலான ஊடகங்கள் முயல்கின்றன. வெற்றி பெறுவது யார் என்பது வாக்குப்பதிவு நாளன்றுதான் தெரியவரும் என்ற போதும் பாரபட்சமற்ற, நியாயமான தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.இறுதிக்கட்ட வாக்குப்பதிவின்போது மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. தேர்தல் நடைமுறைகள் துவங்கியதிலிருந்தே இடதுசாரிக்கட்சி ஊழியர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். மம்தா கட்சி குண்டர்கள்வாக்காளர்களை மிரட்டினர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் வேலையும் நடைபெற்றது.

இதைதடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தேசிய அளவில் பாஜகவுக்கு அனுசரணையாகவே தேர்தல் ஆணையம் நடந்துகொண்டது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாதேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறினர்.எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை திட்டமிட்டு முடக்கிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் விதிமீறல்களை கண்டும் காணாமல் இருந்தது.மோடி ஆட்சியில் மத்திய திட்டக்குழு, மத்தியபுலனாய்வுத்துறை, ரிசர்வ் வங்கி, நீதித்துறை எனபல்வேறு துறைகள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டன. தற்போது இந்த பட்டியலில் தேர்தல் ஆணையமும் இணைந்துள்ளது. தேர்தல் ஆணையர்அசோக் லவாசா இதுகுறித்து வெளிப்படையாகவே புகார் கூறியுள்ளார். நெறிமுறை மீறல்கள்தொடர்பாக தம்முடைய கருத்து ஏற்கப்படவில்லையென்றும் எனவே இனி ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும்அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, அமித்ஷா மீதான புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டது குறித்து தம்முடைய எதிர்ப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றுஅசோக் லவாசா கூறியுள்ளதாக தெரிகிறது.மோடி ஆட்சியில் மத்திய புலனாய்வுத்துறை பிளவுபட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது சக நீதிபதிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். தங்களுக்கு ஒத்துவராத ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் பாஜகவினால் பந்தாடப்பட்டனர்.தமிழகத்திலும் கூட ஆளும் கட்சிகளான அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஆதரவாகவே தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் நடந்து கொண்டனர். வாக்கு எண்ணிக்கையின் போதும்பெருமளவு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புண்டு என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையையாவது எவ்வித புகாரும் இல்லாமல் நேர்மையாக நடத்ததேர்தல் ஆணையம் முன்வரவேண்டும். தேர்தல்முறையை அதன்மூலம் ஜனநாயகத்தை சீரழிக்கதேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது.


;