headlines

img

பேச்சுவார்த்தை தொடரட்டும் பதற்றம் தணியட்டும்

எல்லைப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தையை தொடர்வது என்று இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். 

இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் அளவி லான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப் பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையில் நல்லுறவு மேலும் வளர வேண்டுமெனில் எல்லையில் அமைதியும், நல்லிணக்கமான சூழலும் நிலவு வது அவசியம் என்று இந்திய அயல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருநாட்டு தலைவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படை யில் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சனைக்கு விரைவில் சுமூக தீர்வு காண்பதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று என்ற கொள்ளை நோயின் பிடியில் உலகம் சிக்கி யுள்ளது. இதிலிருந்து மீண்டு மக்களை பாது காப்பதுதான் எல்லா நாடுகளுக்கும் அதிகபட்ச முன்னுரிமையாக இருக்க முடியும். இந்த சூழ் நிலையில் இந்திய-சீன எல்லையில் கடந்த சில வாரங்களாக நிலவிய பதற்றம் இருநாடுகளின் கவனத்தையும் திசைதிருப்பும் வாய்ப்பு உள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இப்போ தைக்கு இரு நாடுகளுக்கும் முன்னுரிமை பணியாகும். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை தாவா என்பது நீண்டகாலமாக உள்ளது. குறிப்பாக லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. இருதரப்பும் வீரர்களை அதிக ரிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சனை தொடர்பாக இதுவரை இந்திய- சீன ராணுவத்தின் கமாண்டர்கள் அள விலான பேச்சுவார்த்தை 12 முறையும், ராணுவ மேஜர் அளவிலான பேச்சுவார்த்தை மூன்று முறையும் நடைபெற்றுள்ளன. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இருநாடுகளும் தொடர்பு டைய இந்த பிரச்சனையில் சுமூகமான தீர்வினை எட்ட பேச்சுவார்த்தையை தொடர்வதை தவிர வேறு மார்க்கம் இல்லை.

கொரோனா வைரஸ் தொற்றை பயன் படுத்திக் கொண்டு அமெரிக்கா, சீனாவுக்கு எதி ரான அவதூறுகளை அவிழ்த்து விட்டவண்ணம் உள்ளது. அதற்கு உரிய முறையில் சீனா பதி லளித்து வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ளது உல களாவிய ஒரு பிரச்சனை. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து அறிவியலையும், மருத்து வத்தையும் முழுமையாக பயன்படுத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நாட்டில் உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்ப சீனா வுடன் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்தியாவிலும் கூட டிரம்பின் குரலில் பேசுப வர்கள் உள்ளனர். அவர்களுக்கு இடமளிக்காத வகையில் பேச்சுவார்த்தையை தொடர முடிவு செய்திருப்பது நல்லது.

;