headlines

img

காலம் கடந்த ஞானோதயம்

தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களின் வேலை நிறுத்தம் 6வது நாளை எட்டியுள்ளது. இதனால் முக்கிய நகரங்களில் கேன் தண்ணீருக்கு  கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது.  சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு  மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டதால்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல  மாவட்டங்களில் சட்ட விரோதமாக செயல்பட்ட ஆலைகளுக்கு அதி காரிகள் சீல் வைத்தனர்.  அதற்கு எதிர்ப்பு தெரி வித்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

1,689 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள்  உற்பத்தியை நிறுத்திவிட்டதால் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் குடிநீர் கேன்களின் விநியோகம் நின்று விட்டது. இதனால் இந்த தண்ணீரை நம்பியிருந்த பொதுமக்களும்  சிறிய அளவில் உணவகம் நடத்து வோரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். உற்பத்தி குறைந்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில விற்பனையாளர்கள் கேன்களை பதுக்கி வைப்ப தும் கூடுதல் விலைக்கு விற்பதும் நடக்கிறது. இது மக்களை மேலும் கோபத்திற்கு ஆளாக்கி யுள்ளது. 

மக்களுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீரை வழங்குவது அரசின் கடமை. அதுவும் மக்களை பல்வேறு உடல் உபாதைக ளில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவேண்டும் என்பது உலக சுகாதார நிறு வனத்தின் வேண்டுகோள் ஆகும். அரசின் குடிநீர் விநியோகம் சீராக இல்லாத போதும், சாக்கடை கலந்த நீர் வரும்போதும் வேறுவழியின்றி மக்கள் கேன் குடிநீரை நாடவேண்டியுள்ளது.எனவே அரசு தனது குடிநீர் விநியோகத்தை சரி செய் தாலே பாதிப்பிரச்சனை தீர்ந்து விடும்.

மறுபுறம் கேன் குடிநீர் தான் சுத்தமானது என்றும் அதை அருந்தினால் உடல் ஆரோக்கி யம் காக்கப்படும் என்றும் தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எல்லா நாடுகளிலும் நகராட்சி வழங்கும் தண்ணீர் தான் பாதுகாப்பானது. கார ணம் அவர்கள் சுகாதாரத்துறையின் ஆலோச னையின் பேரில் சரிவிகித அளவில் குளோரின் கலந்து அந்த தண்ணீரை விநியோகிக்கின்றனர். சில நேரங்களில் குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவு காரணமாக தண்ணீர் மாசடையலாம். ஆனால் அதை பெரிதுபடுத்தி நகராட்சி தண்ணீரே மோசமானது என்றும் பாது காப்பற்றது என்றும் கருதுவது தவறு.அரசாங்க மும் சில தனியார் தண்ணீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை தாராளமாக சுரண்டும்போது வேடிக்கை பார்த்து விட்டு தற்போது நடவடிக்கை எடுப்பது காலம் கடந்த ஒன்றாகும்.

நிலத்தடி நீரை பாதுகாக்க ஏற்கனவே உள்ள சட்டங்களை கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும், தற்போது செயல்படும் குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களை நம்பி ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அந்த  நிறுவனங்களை முறைப்படுத்தவேண்டும், அந்த நிறுவனங்கள், அரசிடம் அனுமதி பெற்ற அளவில் மட்டும் குடிநீர் எடுக்கிறார்களா என்பதை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், மக்களின் உடல் ஆரோக்கியம் தொடர் பான விஷயம் இது என்பதால் எந்த வித முறை கேடுகளுக்கும் அரசு இடம் தரக்கூடாது.

;