headlines

img

கொரோனா தடுப்பின் லட்சணம் இதுதானா?

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் ஆட்டிப் படைத்து வருகிறது. நாடு முழுவதும் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6 லட்சத்து 35 ஆயிரத்து 756 பேர் குணமடைந்துள்ள போதிலும் மருத்துவமனைகளில் 3,42,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசின் கணக்குப்படி மொத்தம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைகள் குறை வாக உள்ளதால் இந்த நோய்த்தொற்றின் தாக்கம் முழுமையாகத் தெரியவில்லை. 

சென்னையில் கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று குறைந்து வந்தாலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், மதுரை, தேனி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில் அதிகரித்து வரு கிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியுடனும் பதற் றத்துடனும் உள்ளனர். மக்களைப் பாதுகாக்க போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளதாக மத்திய ,மாநில அரசுகள் சொல்லிக் கொண்டாலும் களத்திலிருந்து வரும் செய்திகள் வேறுவிதமாக உள்ளன. 

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளைச் சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் சானிடைசர் தேவை அதி கரித்துள்ளதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், விமானம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்க ளில் கண்டிப்பாக சானிடைசர் வைக்க வேண் டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

இதனால் சானிடைசர் பயன்பாடு தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்றா டம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருளாகி விட்டது. இதனால் உலகம் முழுவதும் சானிடை சர் வர்த்தகம் பல கோடி ரூபாயாக அதிகரித்துள் ளது. நாட்டில் சானிடைசர் அத்தியாவசியப் பொ ருட்கள் பட்டியலில் வந்தாலும், அதற்கு விதிக்கப் படும் ஜிஎஸ்டி வரி முன்பு 12 விழுக்காடாக இருந்தது. இதனை மத்திய அரசு தற்போது 18 விழுக்காடாக அதிகரித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு சற்றும் குறை யாத நேரத்தில் மத்திய அரசின் இத்தகைய நடவ டிக்கை மக்களின் உயிரைப்பற்றி சிறிதும் கவலைப் படாத செயலாகும். ஏற்கனவே ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி கொள்ளையடித்து வருகிறது. தற்போது மோடி அரசு சானிடைசரையும் விட்டு வைக்கவில்லை.

அன்றாட வாழ்க்கையின் ஒருபகுதியாக சானி டைசர் மாறிவிட்ட காலகட்டத்தில் அதற்கு 18 சத வீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். முன்பிருந்த 12 விழுக் காடு வரியையும் மேலும் குறைக்கவேண்டும், நோய்த் தொற்றிலிருந்து மக்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் சோப்பு, சானி டைசர் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

;